வீடே மணக்க மணக்க ருசியான தேங்காய்ப்பால் தக்காளி சாதம் இனி இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

தமிழ்நாட்டில் பல விதமான கலவை சாதம் செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை புகழ்பெற்றவை. அதில் நாம்‌ இன்று பார்க்க இருப்பது தேங்காய்பால் தக்காளி சாதம். தக்காளி சாதம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் ஒரு டிஷ் ஆகும். அதிலும் குக்கரில் தக்காளி சாதம் செய்து கொடுத்தால் எல்லோரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது எப்போது பார்த்தாலும் தோசை, இட்லி என்று செய்து கொடுத்து, அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு போர் அடித்திருக்குமோ, இல்லையோ, அதை சமைத்துக் கொடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக போர் அடித்திருக்கும். ஆகவே அந்த தோசை, இட்லிக்கு பதிலாக அவர்களுக்கு மிகவும் சுவை மிக்கதாக, விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு தக்காளி சாதம் தான் சிறந்தது.

-விளம்பரம்-

இந்த தக்காளி சாதத்தில், தக்காளி அதிகமாக இருப்பதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும் வகையில் இருக்கும். பொதுவாகவே குழந்தைகள் வெரைட்டி ரைஸ்களை விரும்பி சாப்பிடுவார்கள். காரணம், அது அவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஈஸியாக இருக்கும், அதே நேரம் சாதம், குழம்பு என தனித்தனியாக சாப்பிடுவதை விட இதுப்போன்ற ரைஸ்களை ஸ்பூனில் எளிதாக சாப்பிடலாம். இதனால் தான் லெமன் ரைஸ், பிரிஞ்சி, ஃபைரைட் ரைஸ், தக்காளி சாதம் போன்றவை குழந்தைகளின் லன்ச் பாக்ஸ் ரெசிபியில் அதிகம் இடம் பிடிக்கிறது. அதுவும் அவர்களுக்கு பிடித்தது போலவே உருளை கிழங்கு வறுவல், சிக்கன் பக்கோடா, முட்டை ஆம்லெட் , காலிஃபிளவர் பக்கோடா ஆகியவற்றை சைடிஷ்ஷாக கொடுத்தால் போது அரை மணி நேரத்தில் காலி செய்துவிடுவார்கள்.

- Advertisement -
Print
No ratings yet

தேங்காய்ப்பால் தக்காளி சாதம் | Thengaipaal Tomato Rice Recipe In Tamil

தமிழ்நாட்டில் பல விதமான கலவை சாதம் செய்யப்படுகிறது. குறிப்பாக தேங்காய் சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், கத்திரிக்காய் சாதம், கொத்தமல்லி சாதம், கருவேப்பிலை சாதம் ஆகியவை புகழ்பெற்றவை. அதில் நாம்‌ இன்று பார்க்க இருப்பது தேங்காய்பால் தக்காளி சாதம். தக்காளி சாதம் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் ஒரு டிஷ் ஆகும். அதிலும் குக்கரில் தக்காளி சாதம் செய்து கொடுத்தால் எல்லோரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது எப்போது பார்த்தாலும் தோசை, இட்லி என்று செய்து கொடுத்து, அதை சாப்பிடும் குழந்தைகளுக்கு போர் அடித்திருக்குமோ, இல்லையோ, அதை சமைத்துக் கொடுத்து அனுப்பும் பெற்றோர்களுக்கு கண்டிப்பாக போர் அடித்திருக்கும். ஆகவே அந்த தோசை, இட்லிக்கு பதிலாக அவர்களுக்கு மிகவும் சுவை மிக்கதாக, விரைவில் ரெடியாகுமாறு ஒரு டிஸ் செய்ய வேண்டுமென்றால், அதற்கு தக்காளி சாதம் தான் சிறந்தது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Thengaipaal Tomato Rice
Yield: 4 People
Calories: 86kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

  • 1 கப் அரிசி
  • 2 கப் தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 3 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் புதினா, கொத்தமல்லி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பட்டை
  • 2 ஏலக்காய்
  • 2 மராத்தி மொக்கு
  • 1 பிரியாணி இலை
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • நெய் தேவையான அளவு
  • 1/2 கப் தேங்காய் பால்
  • 1/4 கப் பச்சை பட்டாணி

செய்முறை

  • முதலில் அரிசியை நன்கு கழுவி சிறிது நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து காய்ந்ததும் பட்டை, இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, மராத்தி மொக்கு சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லித்தழை, புதினா, உப்பு, தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
  • பின் பச்சைப்பட்டாணி மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதித்ததும் அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான தேங்காய்ப்பால் தக்காளி சாதம்‌ தயார். இதற்கு தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு வறுவல் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

Nutrition

Serving: 400g | Calories: 86kcal | Carbohydrates: 3.5g | Protein: 8g | Fat: 2.1g | Sodium: 6mg | Potassium: 237mg | Fiber: 2.1g | Vitamin A: 20IU | Vitamin C: 26mg | Calcium: 10mg | Iron: 3mg

இதனையும் படியுங்கள் : வீட்டில சாதம் மிஞ்சிடுச்சு அப்படின்னா ஒரு தடவ இந்த பழைய சாத அடை செஞ்சு பாருங்க சட்டுனு காலி ஆகிவிடும்!