ஆரோக்கியம் நிறைந்த தினை இனிப்பு பணியாரம் இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

தோசை முதல் இட்லி மற்றும் சாம்பார் வரை தென்னிந்திய உணவு எல்லாமே ஆரோக்கியம் தான். தென்னிந்திய உணவு வகைகளில் பெரும்பாலான உணவுகள் எல்லா நேரத்திலும் பிடித்த தேர்வாக அமைகின்றன. ஒவ்வொரு உணவிலும் சில தனித்துவமான உணவுகள் உள்ளன. அத்தகைய ஒரு சுவையான தென்னிந்திய சிற்றுண்டி தான் குழி பணியாரம். டயட்டில் இருப்போர் காலை வேளையில் தானியங்களை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். அத்தகைய தானியங்களில் ஒன்று தான் தினை.

-விளம்பரம்-

இந்த தினையைக் கொண்டு உப்புமா, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இதுவரை அரிசி மாவைக் கொண்டு தான் பணியாரம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான தினையைக் கொண்டு பணியாரத்தை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை‌ முயற்சி செய்யுங்கள். காலை முதல் மாலை வரை புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த டிபனை காலை உணவாக சாப்பிடலாம். மேலும் இந்த தினை குழிப்பணியாரமானது இனிப்பானது என்பதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். அதனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் இப்படி குழி பணியாரம் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

- Advertisement -
Print
No ratings yet

தினை இனிப்பு பணியாரம் | Thinai Sweet Paniyaram Recipe In Tamil

பொதுவாக உடல் ஆரோக்கியத்திற்கு சிறுதானிய உணவுகளை நன்றாக சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். சிறுதானியங்கள் உடல் எடை குறைப்பிற்கும் உதவுகிறது. சிறுதானியங்களைக் கொண்டு நாம் ஏராளமான உணவுகளை செய்யலாம். சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய தயிர் சாதம், ஆகியவை மிகவும் பிரபலமாகும். அத்தகைய தானியங்களில் ஒன்று தான் தினை. இந்த தினையைக் கொண்டு உப்புமா, பணியாரம், இட்லி என்று எது வேண்டுமானாலும் செய்து சாப்பிடலாம். இது செரிமானத்தை எளிதாக்குகிறது. இதுவரை அரிசி மாவைக் கொண்டு தான் பணியாரம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் தானியங்களில் ஒன்றான தினையைக் கொண்டு பணியாரத்தை செய்து சுவைத்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை‌ முயற்சி செய்யுங்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, evening
Cuisine: Indian
Keyword: Thinai Sweet Paniyaram
Yield: 4 People
Calories: 151kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 குழிபணியார கல்

தேவையான பொருட்கள்

  • 1 கப் தினை
  • 1 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 2 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
  • 1/4 டீஸ்பூன் உப்பு
  • 1/4 கப் நெய்

செய்முறை

  • முதலில் திணை அரிசியை நன்கு கழுவி ஒரு துணியில் காய வைத்து எடுத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் தினை மற்றும் வெந்தயம் சேர்த்து நன்கு பொடித்து சலித்து எடுத்துக்கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு பவுளில் தினை மாவு, சர்க்கரை பாகு, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும்.
  • ஒரு‌ பணியார சட்டியை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து பணியார மாவை ஊற்றவும். பணியாரம் இருபுறம் வெந்ததும் எடுத்து விடவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்தான திணை இனிப்பு பணியாரம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 151kcal | Carbohydrates: 6.2g | Protein: 12.3g | Fat: 4.3g | Sodium: 4mg | Potassium: 250mg | Fiber: 6.7g | Sugar: 2.9g | Calcium: 31mg | Iron: 8.2mg

இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான தினை பால் பொங்கல் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!