ருசியான தினை தக்காளி சாதம் சாதம் இப்படி செய்து கொடுத்தால் வாய்க்கு ருசியாக இருக்கும்!
பொதுவாக சாதம் என்றால் அரிசியில் செய்யும் சாதம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை தக்காளி சாதம் எத்தனை பேருக்கு தெரியும். சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. கம்பு
பொதுவாக சாதம் என்றால் அரிசியில் செய்யும் சாதம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை தக்காளி சாதம் எத்தனை பேருக்கு தெரியும். சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, சோளம் போன்ற பல தானியங்கள் கிடைக்கிறது. சிறுதானியங்களை பலவிதங்களில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். சிறுதானிய இட்லி மற்றும் தோசை, சிறுதானிய பணியாரம், சிறுதானியக் கஞ்சி, ஆகியவை மிகவும் பிரபலம். சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட. சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த தினை தக்காளி சாதம் உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்கச் செய்கிறது. சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். ஆனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்தால் சாப்பிடுவர்.
சிறுதானியங்களில் பல்வேறு வகையான ருசியான ரெசிபிகள் செய்யலாம். அந்தவவையில் சிறுதானியங்களில் ஒன்றான தினை அரிசியில் தக்காளி சேர்த்து செய்வது குறித்து பார்ப்போம். இந்த தினை தக்காளி சாதம் சுகர் பேஷண்ட்ஸ் மற்றும் உடல் எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த தக்காளி சாதம் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த தக்காளி சாதம் மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் கம்பு அல்வா ஒரு தடவை இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!