ருசியான தினை தக்காளி சாதம் சாதம் இப்படி செய்து கொடுத்தால் வாய்க்கு ருசியாக இருக்கும்!

- Advertisement -

பொதுவாக சாதம் என்றால் அரிசியில் செய்யும் சாதம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை தக்காளி சாதம் எத்தனை பேருக்கு தெரியும். சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, சோளம் போன்ற பல தானியங்கள் கிடைக்கிறது. சிறுதானியங்களை பலவிதங்களில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். சிறுதானிய இட்லி மற்றும் தோசை, சிறுதானிய பணியாரம், சிறுதானியக் கஞ்சி, ஆகியவை மிகவும் பிரபலம். சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

-விளம்பரம்-

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் தினை அரிசி பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. தினைகளில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட. சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த தினை தக்காளி சாதம் உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்கச் செய்கிறது. சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். ஆனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்தால் சாப்பிடுவர்.

- Advertisement -

சிறுதானியங்களில் பல்வேறு வகையான ருசியான ரெசிபிகள் செய்யலாம். அந்தவவையில் சிறுதானியங்களில் ஒன்றான தினை அரிசியில் தக்காளி சேர்த்து செய்வது குறித்து பார்ப்போம். இந்த தினை தக்காளி சாதம் சுகர் பேஷண்ட்ஸ் மற்றும் உடல் எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இந்த தக்காளி சாதம் செய்வது மிகவும் சுலபம். குறிப்பாக மதிய உணவாக குழந்தைகளுக்கு காலை வேளையில் செய்து கொடுக்க ஏற்றதாக இருக்கும். இந்த தக்காளி சாதம் மதிய வேளையிலும் சமைத்து சாப்பிடலாம். பேச்சுலர்கள் கூட செய்வதற்கு ஏற்றதாக இருக்கும்.

Print
5 from 1 vote

தினை தக்காளி சாதம் | Thinai Tomato Rice Recipe In Tamil

பொதுவாக சாதம் என்றால் அரிசியில் செய்யும் சாதம் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். அது ஒரு பக்கம் இருக்க, இந்த சத்தான தினை தக்காளி சாதம் எத்தனை பேருக்கு தெரியும். சிறுதானியங்களை பற்றி பெரிதாக அறிமுகம் தேவையில்லை. இது அனைவரும் அறிந்த சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு வகை. கம்பு, கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, சோளம் போன்ற பல தானியங்கள் கிடைக்கிறது. சிறுதானியங்களை பலவிதங்களில் நாம் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு ஆரோக்கியமான உணவும் கூட. சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த தினை தக்காளி சாதம் உடலில் சேரக்கூடிய சர்க்கரை அளவை தடுத்து நல்ல ஆரோக்கியமான உடல் எடையையும் பராமரிக்கச் செய்கிறது. சிறுதானியங்களை குழந்தைகள் சாப்பிடுவதை தவிர்ப்பர். சுவையாக இருக்காது என்பர். ஆனால் அவற்றை அவர்களுக்கு பிடித்த விதத்தில் செய்து கொடுத்தால் சாப்பிடுவர். சிறுதானியங்களில் பல்வேறு வகையான ருசியான ரெசிபிகள் செய்யலாம். அந்தவவையில் சிறுதானியங்களில் ஒன்றான தினை அரிசியில் தக்காளி சேர்த்து செய்வது குறித்து பார்ப்போம்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Thinai Tomato Rice
Yield: 4 People
Calories: 48kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 குக்கர்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

  • 2 கப் தினை
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • 4 பச்சை மிளகாய்
  • 1/2 கப் பச்சை பட்டாணி
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
  • 1 பிரியாணி இலை
  • 1 அன்னாசி பூ
  • 1/2 டீஸ்பூன் சோம்பு
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் நெய்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு

செய்முறை

  • முதலில் பத்து அல்லது பதினைந்து நிமிடம் திணையை கழுவி ஊற வைத்துக் கொள்ளவும்.
  • தக்காளி மற்றும் வெங்காயத்தை நன்கு கழுவி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு, அன்னாசி பூ, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி பட்டாணி சேர்த்து கலந்து விடவும்.
  • பின் ஊற வைத்த தினையை தண்ணீர் வடித்து விட்டு சேர்த்து கலந்து விடவும். அதன்பிறகு உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.
  • பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதித்தவுடன் குக்கரை மூடி மூன்று விசில் விட்டு இறக்கவும்.
  • பிறகு குக்கரைத் திறந்து நெய், கொத்தமல்லி கலந்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான தினை தக்காளி சாதம் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 48kcal | Carbohydrates: 3.5g | Protein: 4.8g | Fat: 1.2g | Sodium: 6mg | Fiber: 2.4g | Vitamin A: 20IU | Vitamin C: 26mg | Calcium: 4mg | Iron: 2mg

இதனையும் படியுங்கள் : தித்திக்கும் சுவையில் கம்பு அல்வா ஒரு தடவை இப்படி செய்து பாருங்க! வாயில் வைத்தவுடன் கரையும்!