வீட்டில் பணம் மற்றும் செல்வ வளங்கள் சேர 2024 மகா சிவராத்திரி அன்று வாங்க வேண்டிய முக்கியமான 3 பொருட்கள்!

- Advertisement -

மகா சிவராத்திரி இந்த வருடம் மார்ச் 8ம் தேதி வருகிறது. சிவபெருமானை வழிபடக்கூடிய இந்த மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாள் என்று நம் வீட்டில் ஒரு சில பொருட்களை வாங்கி வைப்பதன் மூலம் நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். மேலும் நம் வீட்டில் செல்வமும் பெருகும். இந்த வருட மகா சிவராத்திரி வெள்ளிக்கிழமை வருவதால் இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது. இந்த மகா சிவராத்திரி என்று பலவிதமான சிறப்புகளும் உள்ளது. இந்த மிகப்பெரிய சக்தி வாய்ந்த நாளன்று சிவபெருமானை மனம் உருகி விரதம் இருந்து வழிபட்டால் நாம் எண்ணியதெல்லாம் நிறைவேறும். அதனுடன் இந்த சில பொருட்களையும் வீட்டில் வாங்கி வைத்தால் இன்னும் சிறப்பானதாக இருக்கும். அது என்னென்ன பொருட்கள் எப்படி வழிபட வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்

-விளம்பரம்-

மகா சிவராத்திரி அன்று வீட்டில் சிவபெருமானை வழிபடும் முறை

பொதுவாக வெள்ளிக்கிழமை என்றாலே அது மங்களகரமான நாள். வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் உள்ள பெண்கள் விளக்கேற்றி மகாலட்சுமி தேவியாரை வணங்கி வர அவர்களது வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்து வீட்டில் மகிழ்ச்சி பெருகி செல்வமும் பெருகும். வெள்ளிக்கிழமை என்பது சுக்கிர பகவானுக்கும் மகாலட்சுமி தேவியாருக்கும் உகந்த நாள். எனவே அந்த நாளன்று இன்னும் சிறப்பானதாக இருக்க மகா சிவராத்திரியும் பிரதோஷமும் சேர்ந்து வருகிறது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று பிரதோஷ பூஜை மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரை செய்யலாம். அந்த நேரத்தில் நாம் பூஜை செய்து முடித்து விட்டு கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவது இன்னும் சிறப்பானது. மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜை ஆரம்பிக்கின்ற நேரத்தில் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம் மகாலட்சுமி அம்மையாருக்கு தீபம் ஏற்றி வழிபட்ட அமைதியாக மனதிற்குள் வேண்டினால் மகாலட்சுமி தேவியாரின் முகத்தில் உள் அமைதி நம் முகத்திலும் வரும் என்று சொல்லப்படுகிறது.

சிவராத்திரி அன்று முதல் கால பூஜை மாலை 6.30 மணியிலிருந்து 9.30 வரையிலும் இரண்டாம் கால பூஜை இரவு 9.30 மணியிலிருந்து 12.30 வரையிலும் மூன்றாம் கால பூஜை 12.30 மணியிலிருந்து 3.30 மணி வரையிலும் நான்காம் கால பூஜை அதிகாலை 3.30 மணியிலிருந்து காலை 6.30 மணி வரையிலும் இருக்கும். இந்த நான்கு கால பூஜையில் நாம் சிவபெருமானை வழிபட்டால் மிகவும் நல்லது.

-விளம்பரம்-

சிவராத்திரி அன்று நம் வீட்டில் வாங்கி வைக்க வேண்டிய பொருட்கள்

மகா சிவராத்திரி அன்று மகாலட்சுமி தேவிக்கு உகந்த கல் உப்பு காலையிலேயே வாங்கி வைக்கலாம் அல்லது மதியம் ஒரு மணிக்கு வாங்கி வைக்கலாம். அடுத்து வில்வ இலைகளை வாங்கி வீட்டில் சிவபெருமானின் படத்திற்கு வைத்து பூஜை செய்து வழிபடலாம். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக மல்லிகை பூ அல்லது பன்னீர் ரோஜா வாங்கி அனைத்து தெய்வங்களுக்கும் அதனை போட்டு பூஜை செய்து வழிபடலாம். வெள்ளை நிறத்தால் ஆன ஏதாவது ஒரு நெய்வேதியம் செய்த தெய்வத்திற்கு படைத்து வழிபடலாம். நெய்வேதியம் செய்ய முடியவில்லை என்றால் சர்க்கரை வாங்கி வைத்து வழிபடலாம்.

மகாலட்சுமி தேவியின் அம்சமான ஏலக்காய் வாங்கி வைத்து வணங்கலாம். மறுநாள் இந்த பொருட்களை எல்லாம் வீட்டில் உணவிற்கு சமையல் செய்யும்பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பொருட்களை எல்லாம் சிவராத்திரி அன்று முதல் கால பூஜை ஆரம்பிக்கும் போது வீட்டில் வாங்கி வைத்து வழிபடலாம். இரவு முழுவதும் கண்களுக்கு விரதம் இருப்பவர்கள் ஆக இருந்தால் அந்த நேரத்தில் சிவபுராணம் படிக்கலாம். ஓம் மகாலட்சுமியே போற்றி என்ற மந்திரத்தை உச்சரிக்கலாம். வெள்ளிக்கிழமை வருகின்ற இந்த மகா சிவராத்திரியில் மனம் உருக நீங்கள் சிவபெருமானிடம் வேண்டினால் உங்களுக்கு அனைத்தும் நல்லதாகவே நடக்கும்.

-விளம்பரம்-