காலை டிபனுக்கு ருசியான தக்காளி அவல் உப்புமா இப்படி ட்ரை பண்ணி பாருங்கள்!

- Advertisement -

அசத்தலான காலை உணவு அப்படின்னு சொல்லிட்டு தக்காளி அவல் உப்புமா அப்படின்னு சொல்லிட்டீங்க அப்படின்ன நினைக்காதீங்க. உப்புமா அப்படினாலே நம்ம யாருக்குமே அதிகமா பிடிக்கவே பிடிக்காத உணவு அப்படின்னு சொல்லுவீங்க இருந்தாலும் இந்த தக்காளி அவல் உப்புமா ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும்.

-விளம்பரம்-

என்னம்மா உப்புமா செஞ்சீங்களா ரொம்ப தப்பு பண்றீங்க அம்மா அப்படின்ற மாதிரி தான் நம்ம வந்து உப்புமா மேல ஒரு எண்ணத்தை வைத்து இருக்கோம். ஆனால் உப்புமா அப்படின்ற உணவு ரொம்ப லைட்டான ஒரு உணவு உடலுக்கு சக்தியை கொடுக்கும் ஆனா நிறைய கலோரிஸ் வந்து எடுத்துக்காது. அதனால் இந்த மாதிரி உணவை நம்ம சாப்பிடும் பொழுது அது உடலுக்கு ரொம்பவே ஆரோக்கியமா இருக்கும்.

- Advertisement -

ஏன்னா நம்ம  உப்புமாவுல ரொம்ப ரொம்ப குறைவான கலோரி உள்ள பொருட்களை மட்டும் தான் நம்ம சேர்த்து செய்யப் போறோம். அதனால உப்புமா அப்படிங்கறது ஒரு ஹெல்த்தியான உணவு தான். உப்புமால ரவா உப்புமா , சேமியா உப்புமா, இடியாப்ப உப்புமா அப்படின்னு நிறைய உப்புமாக்கள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனால் நம்ம இப்ப செய்ய போறது அவல் தக்காளி உப்புமா அந்த உப்புமாவ எப்படி செய்யலாம். இந்த அவல் தக்காளி உப்புமாவை காலை உணவாகவும் சாப்பிடலாம் இல்ல மாலை சிற்றுண்டி உணவாகவும் நம்ம எடுத்துக்கலாம்.

எல்லா உப்புமாவும் ஒரே மாதிரி சுவைல தான் இருக்கும் அப்படின்னு நினைக்காதீங்க ஒரு ஒரு உப்புமாவுக்கும் ஒரு ஒரு தனி ருசி கண்டிப்பாக இருக்கு. அந்த வகையில் இந்த தக்காளி அவல் உப்புமா நம்ம எல்லாருக்குமே ரொம்பவே விருப்பமா பிடிச்சதா இருக்கும். சரி வாங்க எப்படி இந்த தக்காளி அவல் உப்புமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.

Print
No ratings yet

தக்காளி அவல் உப்புமா | Tomato Flattened Rice Upma

உப்புமாவுல ரொம்ப ரொம்ப குறைவான கலோரி உள்ள பொருட்களை மட்டும் தான் நம்ம சேர்த்து செய்யப் போறோம். அதனால உப்புமா அப்படிங்கறது ஒரு ஹெல்த்தியான உணவு தான். உப்புமால ரவா உப்புமா , சேமியா உப்புமா, இடியாப்ப உப்புமா அப்படின்னு நிறைய உப்புமாக்கள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனால் நம்ம இப்ப செய்ய போறது அவல் தக்காளி உப்புமா அந்த உப்புமாவ எப்படி செய்யலாம். இந்த அவல் தக்காளி உப்புமாவை காலை உணவாகவும் சாப்பிடலாம் இல்ல மாலை சிற்றுண்டி உணவாகவும் நம்ம எடுத்துக்கலாம். சரி வாங்க எப்படி இந்த தக்காளி அவல் உப்புமா செய்யலாம் அப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Tomato Flattened Rice Upma
Yield: 4
Calories: 84kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 2 கப் கெட்டி அவல்
  • 1 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 துண்டு இஞ்சி
  • 2 பச்சைமிளகாய்
  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய்தூள்
  • 2 ஸ்பூன் வேர்க்கடலை
  • 1 சிட்டிகை பெருங்காயம் தூள்
  • உப்பு தேவையானஅளவு
  • கொத்தமல்லி சிறிதளவு

தாளிக்க

  • 1 ஸ்பூன் கடுகு
  • 1 ஸ்பூன் உளுந்து
  • 2 ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • கடைகளில் இரண்டு வகை அவல் கிடைக்கும் ஒன்று லேசான அவல் இன்னொன்று கெட்டி அவல் லேசான அவலை இது போன்று உப்புமாக்கள் சாதங்கள் செய்வதற்கு பயன்படுத்தினால் சீக்கிரமாக குழைந்து விடும். ஆகையால் கெட்டி அவல் வாங்கி செய்யும் பொழுது உணவு உண்பதற்கு மிகவும் ருசியாக இருக்கும்.
     
  • முதலில் அவலை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் நீரூற்றி மூன்று முறை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விட்டு அவலை எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • அவலை ஊற வைக்கத் தேவையில்லை கழுவும் நீரிலேயே அவல் ஊறிவிடும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காயந்ததும் வேர்க்கடலையை பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி என்னை காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு , கறிவேப்பிலை சேர்த்து நன்றாக தாளிக்கவும் . நன்றாக கடுகு பொரிந்து பிறகு அதில் பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  •  
    பின்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
     
  • அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை வெங்காயத்தோடு சேர்த்து நன்றாக வதக்கவும். நீரெல்லாம்  நன்றாக வற்றி சுருள வர போது மிளகாய்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலந்து விடவும்.
  •  மசாலாக்களின் பச்சை வாசனை சென்ற பிறகு அதில் கழுவி வைத்துள்ள அவலை சேர்த்து நன்றாக கிளறி விடவும். மசாலாக்கள் அவலோடு ஒன்றாக கலந்த பிறகு அதன் மேல் கொத்தமல்லி இலைகளை தூவிகிளறி விடவும்.
  • பின்பு வறுத்து வைத்துள்ள வேர்க்கடலையை சேர்ந்த கலந்து விட்டு பரிமாறினால் அசத்தலான தக்காளி அவல் உப்புமா தயார்.

Nutrition

Serving: 200g | Calories: 84kcal | Carbohydrates: 45g | Protein: 12g | Fat: 1g | Saturated Fat: 1.3g | Sodium: 4mg | Potassium: 94mg | Fiber: 2g | Sugar: 0.7g