சுவையான தக்காளி தொக்கு இப்படி செய்து பாருங்க! பின் அடிக்கடி நீங்களே செய்வீங்க!

- Advertisement -

தினமும் என்னடா குழம்பு செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நம் நினைவிற்கு சட்டென வருவது சுலபமாக செய்யக்கூடிய இந்த தக்காளி தொக்கு தான். தக்காளி தொக்கு நல்ல சுவையாகவும், டேஸ்டியாகவும் இருப்பதற்கு இந்த சில விஷயங்களை சேர்த்து செய்து பாருங்கள்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : காரசாரமான பூண்டு தொக்கு இப்படி செய்து பாருங்க! எப்பொழுதும் சட்னியை செய்வதற்கு இந்த தொக்கு செய்யுங்கள்!

- Advertisement -

பள்ளிக்கு போகும் குழந்தைகளும் சரி, வேலைக்கு போகும் பெரியவர்களும் சரி இந்த தக்காளி தொக்கு ரொம்பவே விரும்பி மதிய நேரத்தில் சாப்பிட கூடும். ருசியான தக்காளி தொக்கு எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

Print
3 from 2 votes

தக்காளி தொக்கு | Tomato Thokku Recipe in Tamil

தக்காளி தொக்கு நல்ல சுவையாகவும், டேஸ்டியாகவும் இருப்பதற்கு இந்த சில விஷயங்களை சேர்த்து செய்து பாருங்கள். பள்ளிக்கு போகும் குழந்தைகளும் சரி, வேலைக்கு போகும் பெரியவர்களும் சரி இந்த தக்காளி தொக்கு ரொம்பவே விரும்பி மதிய நேரத்தில் சாப்பிட கூடும். ருசியான தக்காளி தொக்கு எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Prep Time10 minutes
Active Time15 minutes
Total Time25 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Tomato, தக்காளி
Yield: 4 People
Calories: 217kcal

Equipment

  • 1 ம
  • 2 க

தேவையான பொருட்கள்

  • 1 kG தக்காளி
  • புளி
  • 1 Tbsp
  • 1 Tbsp
  • 5 பல்
  • 1 Tsp
  • 1/2 கப்
  • 1/2 Tsp
  • 1 Tsp

செய்முறை

  • முதலில் வெந்தயம், பெருங்காயம் இவை இரண்டையும் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். தக்காளியைக் கழுவித் துடைத்து, துண்டுகளாக நறுக்குங்கள்.
  • பின்பு நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் போட்டு, அதனுடன் மிளகாய்த்தூள், புளி உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதை, அடி கனமான பாத்திரம் ஒன்றில் போட்டு, அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்கள்.
  • நாம் சேர்த்த விழுது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அது வெளியே தெறிக்கும். இப்போதுதான் நீங்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் கொதிக்க ஆரம்பித்ததும், மூடியால் மூடிவிடுங்கள்.
  • (இல்லையெனில் கொதிக்கும் தொக்கு கைகளில் பட்டு, புண்ணாகும் வாய்ப்பு உள்ளது) அவ்வப்போது தீயைக் குறைத்துவிட்டு, மூடியைத் திறந்து நன்கு கிளறி விடுங்கள்.
  • தண்ணீர் ஓரளவுக்கு வற்றிச் சுருங்கியதும், மூடியை எடுத்துவிட்டு, ஓரளவுக்கு நடுத்தரத் தீயில் வைத்துக் கிளறிக்கொண்டே இருங்கள். அதே சமயத்தில் இன்னொரு அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, கடுகைச் சேருங்கள்.
  • பின் கடுகு பொரிந்ததும் அதைத் தக்காளிக் கலவையில் சேருங்கள். பின் பூண்டை (தோல் உரிக்காமல்) நசுக்கிச் சேருங்கள். வெந்தயம், பெருங்காயத்தூளைச் சேர்த்து, சுருங்கக் கிளறி இறக்குங்கள். சுவையான தக்காளி தொக்கு தயார்.

Nutrition

Serving: 1200G | Calories: 217kcal | Carbohydrates: 2g | Protein: 2.5g | Fat: 1.5g | Saturated Fat: 0.5g | Cholesterol: 1mg | Sodium: 35mg | Potassium: 400mg | Fiber: 4g | Sugar: 1.5g | Iron: 2mg