ஒருமுறை இப்படி தக்காளி வெஜ் ஆம்லெட் செய்து பாருங்கள், ஆஹா! எவ்வளவு ருசி என்று அனைவரும் பாராட்ட ஆரம்பித்து விடுவார்கள்

- Advertisement -

சைவ பிரியர்களுக்கு ஒரு சுவையான தக்காளி வெஜ் ஆம்லெட் செய்து காட்ட போறோம். அசைவ பிரியர்கள் தினமும் கூட ஒரு ஆம்புலன்ஸ் சாப்பிடுவாங்க அதான் உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதோட டெய்லி ஒரு முட்டை ஆம்லெட் சாப்பிடுவதும் உடம்புக்கு ரொம்பவே நல்லது. ஆனா சில சைவ பிரியர்களுமே இந்த முட்டை ஆம்லெட் சாப்பிடுவாங்க.

-விளம்பரம்-

ஆனா ஒரு சிலர் சுத்தமா முட்டை சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு ஒரு மாற்றாக முட்டை ஆம்லெட்டுக்கு பதிலா இந்த தக்காளி வெஜ் ஆம்லெட் ஒரு ஆப்ஷனா இருக்கும். எப்பவுமே காலைல இட்லி தோசை பொங்கல் பூரி அப்படின்னு சாப்பிட்டு போர் அடிச்சு போயிருந்தா இந்த தக்காளி வெஜ் ஆம்லெட் செஞ்சு பாருங்க உங்களுக்கு ஒரு புது காலை உணவு கிடைப்பதுடன் உடம்புக்கு ரொம்பவே ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

- Advertisement -

ரொம்பவே எளிதா சுலபமா சீக்கிரத்துல செய்யக்கூடியது தான் இந்த தக்காளி வெஜ் ஆம்லெட். வெஜ்ஜில் ஆம்லெட் என்னதான் முட்டை ஆம்லெட் அளவுக்கு இல்லனாலும் நம்ம அசைவம் சாப்பிடாத சமயத்துல இந்த வெஜ் ஆம்லெட் சாப்பிட்டுக்கலாம். காலையில சாப்பிடலனா கூட மாலை நேர ஸ்நாக்ஸா குழந்தைகளுக்கு இதை செஞ்சு கொடுக்கலாம் அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல முட்டை இல்லாத சமயத்துல இந்த ஆம்லெட் செஞ்சு கொடுத்தா குழந்தைகளுக்கு ரொம்ப வே பிடிக்கும். வாங்க இந்த தக்காளி வெஜ் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 2 votes

தக்காளி வெஜ் ஆம்லெட் | Tomato Veg Omelet Recipe In Tamil

சுலபமா சீக்கிரத்துல செய்யக்கூடியது தான் இந்த தக்காளி வெஜ் ஆம்லெட். வெஜ்ஜில் ஆம்லெட் என்னதான் முட்டை ஆம்லெட் அளவுக்கு இல்லனாலும் நம்ம அசைவம் சாப்பிடாத சமயத்துல இந்த வெஜ் ஆம்லெட் சாப்பிட்டுக்கலாம். காலையில சாப்பிடலனா கூட மாலை நேர ஸ்நாக்ஸா குழந்தைகளுக்கு இதை செஞ்சு கொடுக்கலாம் அவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல முட்டை இல்லாத சமயத்துல இந்த ஆம்லெட் செஞ்சு கொடுத்தா குழந்தைகளுக்கு ரொம்ப வே பிடிக்கும். வாங்கஇந்த தக்காளி வெஜ் ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Tomato Veg Omelet
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 பெரிய பவுள்
  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 8 தக்காளி
  • 10 சின்ன வெங்காயம்
  • 1 கப் கடலை மாவு
  • 4 கப் அரிசி மாவு
  • 2 கப் மிளகாய்த் தூள்
  • 1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
  • 2 பச்சை மிளகாய்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் தக்காளியை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்த உடன் அது தக்காளியை சேர்த்து நன்றாக வேக வைக்கவும். நன்றாக வெந்தவுடன் அது ஆரிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு அதனுடன் அரிசி மாவு மற்றும் கடலைமாவை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
  • பிறகு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் மல்லி இலைகளையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.
  • ஒரு அடுப்பில் தோசை கல்லை வைத்து காய்ந்தவுடன் அதில் இந்த கலவையை ஊற்றி தேய்க்காமல் பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுத்தால் தக்காளி வெஜ் ஆம்லெட் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Iron: 0.9mg