தூனா மீனுடன் முட்டை சேர்த்து சூப்பரான கட்லெட் இப்படி சுலபமாக செய்து பாருங்க! இதன் ருசியே தனி!

- Advertisement -

கட்லெட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடிய ஒரு ஸ்நாக்ஸ் வகையாக இருக்கிறது. அந்த கட்லெட் அசைவத்தில் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் பொழுது உடனே செய்து அசைத்தி விடக்கூடிய இந்த கட்லெட், முட்டை மற்றும் தூனா மீன் வைத்து செய்யலாம் .

-விளம்பரம்-

மணக்க மணக்க தூனா மீன் உருளை கட்லெட்  ஒருமுறை இப்படி சுவைத்து விட்டால், இதே மீன் கட்லெட் தான் சமைக்க வேண்டும் என்று அனைவரும் அடம் பிடிப்பார்கள்.மீன் கட்லெட் வார இறுதிகளில் குடும்பத்தோடு சுவைத்து மகிழ ஒரு அருமையான உணவாகும். தூனா மீன் வாங்கி இப்படி மீன் கட்லெட் ஒரு முறை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள். ஹோட்டல் களில் மட்டுமே நாம் சுவைத்து மகிழும் மீன் கட்லெட் இதே செய்முறையில் செய்தால் ,நாவூறும் சுவையில் தூனா மீன் உருளை கட்லெட்  வீட்டிலே அடிக்கடி செய்து ருசிக்கலாம். தூனா மீன் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் சுறு சுறுப்பாக இருக்க வைக்கிறது இந்த தூனா மீன்.

- Advertisement -

நீரிழிவு இருபவர்களுக்கு இந்த மீன் ஒரு வர பிரசாதம் ஆகும் . எந்த வித அச்சம் இல்லாமல் இந்த தூனா மீன் உட்கொள்ளலாம். இந்த தூனா மீன் எளிதில் நீரிழிவு நோயை குணபடுத்திவிடும், தூனா மீன் ஜீரணம் ஆகா அதிக நேரம் எடுத்து கொள்வது இல்லை இதனால் அணைத்து வயதிரரும் உட்கொள்ளலாம் இந்த தூனா மீனை இதை மசாலா அதிகம் இல்லாமல் குறைந்த என்னை ஊற்றி சமைத்தல் நல்லது.இதன் சுவையோ அவ்வளவு பிரமாதமாக இருக்கும். இந்த மீன் கட்லெட்டை ஹோட்டல் ஸ்டைலில் சமைக்க போகின்றோம். மீன் வசம் புடிக்காமல் சாப்பிடாதவர் கூட இந்த மீன் கட்லெட்டை விரும்பி உண்பர். வாங்க நாமும் இந்த வித்தியாசமான தூனா மீன் உருளை கட்லெட் கற்றுக் கொள்வோம்.

Print
3 from 2 votes

தூனா மீன் உருளை கட்லெட் | Tuna Potato Cutlet In Tamil

மணக்க மணக்க தூனா மீன் உருளை கட்லெட்  ஒருமுறை இப்படி சுவைத்துவிட்டால், இதே மீன் கட்லெட் தான் சமைக்க வேண்டும் என்று அனைவரும் அடம் பிடிப்பார்கள்.மீன்கட்லெட் வார இறுதிகளில் குடும்பத்தோடு சுவைத்து மகிழ ஒரு அருமையான உணவாகும். தூனா மீன்வாங்கி இப்படி மீன் கட்லெட் ஒரு முறை செய்து வீட்டில் உள்ள அனைவரையும் அசத்துங்கள்.ஹோட்டல் களில் மட்டுமே நாம் சுவைத்து மகிழும் மீன் கட்லெட் இதே செய்முறையில் செய்தால்,நாவூறும் சுவையில் தூனா மீன் உருளை கட்லெட் வீட்டிலே அடிக்கடி செய்து ருசிக்கலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: snacks
Cuisine: tamil nadu
Keyword: Tuna Fish Potato Cutlet
Yield: 4
Calories: 649kcal

Equipment

 • 1 தோசை கல்
 • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

 • 1/2 கிலோ தூனா மீன்
 • 1 பெரிய உருளைக்கிழங்கு
 • 2 வெங்காயம்
 • 4 பச்சைமிளகாய்
 • 3 முட்டை
 • 2 கரண்டி  இஞ்சி பூண்டு விழுது
 • 1 கரண்டி கரம் மசாலா
 • ரொட்டித்தூள் பிரட்டி எடுக்க தேவையான அளவு
 • 300 கிராம் எண்ணெய்
 • 1 டேபிள் ஸ்பூன் உப்பு

செய்முறை

 • உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
 • வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.முட்டையை ஒரு கோப்பையில் ஊற்றி கலக்கி வைக்கவும்.
 • மீனை நன்றாக சுத்தம் செய்துவிடவும். ஒரு சட்டியில் 3 கரண்டி எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை லேசாக வதக்கி இஞ்சி பூண்டு விழுது, மசாலாத்தூள் போட்டு வதக்கவும்.
 • நன்கு வதக்கி மசித்து வைத்த கிழங்கு மீனை போட்டு பிரட்டி எடுக்கவும், பின்பு அடுப்பில் இருந்து இறக்கி விடவும்.
 • சிறிது நேரம் கழித்து தேவையான வடிவில் உருண்டையாகவோ கட்டமாகவோ செய்து முட்டையில் நனைத்து ரொட்டித்தூளில் போட்டு பிரட்டி எண்ணெயில் போட்டு நன்கு பொரித்து சூடாக பரிமாறவும்.

Nutrition

Serving: 500g | Calories: 649kcal | Carbohydrates: 26g | Protein: 46g | Sodium: 649mg | Potassium: 243mg | Fiber: 4g | Vitamin A: 26IU | Calcium: 54mg | Iron: 2mg