சுட சுட சோறுடன் பிசைந்து சாப்பிட ருசியான சுண்டைக்காய் தொக்கு இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

சுண்டைக்காய் கூட்டு சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. சுண்டைக்காய் சுவை நம்மில் பலருக்குப் பிடிக்காது சுண்டைக்காயில் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. மருந்துகள் பொதுவாக கசப்புச் சுவை நிறைந்ததாக இருக்கும். இந்த முறையில் சுண்டைக்காய் கூட்டு வைக்கும் போது கொஞ்சம் கூட அதன் கசப்புத் தன்மை தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

-விளம்பரம்-

கல்யாண வீடுகளிலும், உணவகங்களிலும் தயாரிக்கப்படுகின்ற சுண்டைக்காய் வற்றல் வத்தக்குழம்புக்கென்றெ பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.அதிக ஊட்டசத்துக்கள் கொண்ட சுண்டைக்காயை எதாவது ஒருவகையில் வாரமிருமுறை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சுண்டைக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துக்கள் அதிகளவில் உள்ளது.

- Advertisement -

சுண்டை, மலைச்சுண்டை, பேயத்தி, கடுகி, அமரக்காய் என்றபெயர்களிலும் குறிப்பிடப்படுகிறது. சுண்டைக்காயும் கூட கசப்பாகதான் இருக்கும். ஆனால், வயிற்றுப்பூச்சிகளை கொல்வதில் இருந்து மூலநோயைக் குணப்படுத்துவது, ஹீமோகுளோபினை அதிகரிப்பது என பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டது. இதில் சுவையான சுண்டைக்காய் கூட்டு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

Print
No ratings yet

சுண்டைக்காய் கூட்டு | Turkey Berry Kootu Recipe In Tamil

சுண்டைக்காய் கூட்டு சுவைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. சுண்டைக்காய் சுவை நம்மில் பலருக்குப் பிடிக்காது சுண்டைக்காயில் மருத்துவக் குணம் நிறைந்துள்ளது. மருந்துகள் பொதுவாக கசப்புச் சுவை நிறைந்ததாக இருக்கும். இந்த முறையில் சுண்டைக்காய் கூட்டு வைக்கும் போது கொஞ்சம் கூட அதன் கசப்புத் தன்மை தெரியாமல், சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். கல்யாண வீடுகளிலும், உணவகங்களிலும் தயாரிக்கப்படுகின்ற சுண்டைக்காய் வற்றல் வத்தக் குழம்புக்கென்றெ பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Turkey Berry Kootu
Yield: 4
Calories: 110kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் சுண்டைக்காய்
  • 2 மேசைக்கரண்டி தேங்காய் துருவல்
  • 3/4 தேக்கரண்டி கடுகு
  • 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • புளி சின்ன நெல்லிக்காய் அளவு
  • 1/2 தேக்கரண்டி கல் உப்பு
  • 25 கிராம் துவரம் பருப்பு
  • 2 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • சுண்டைக்காயை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக விடவும்.துவரம் பருப்பில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • புளியுடன் 3 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து கரைத்துஎடுத்துக் கொள்ளவும்.
  • தேங்காயுடன் 2 மேசைக்கரண்டி தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  •  
    வேகவைத்த சுண்டைக்காயுடன் வேக வைத்த பருப்பை போட்டு அடுப்பில் வைத்து புளிக்கரைசலை ஊற்றி 2 நிமிடம் கொதிக்க விடவும்.
  • அதன்பிறகு மிளகாய் தூள், தேங்காய் விழுது போட்டு கிளறி அரை தேக்கரண்டி சீனி போட்டு கலக்கி விடவும். 2 நிமிடம் கழித்து இறக்கி வைத்து கறிவேப்பிலை போடவும்.
  • வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து கூட்டில் சேர்க்கவும்.
  • சுவையும் மணமும் நிறைந்த சுண்டைக்காய் கூட்டு ரெடி.

Nutrition

Serving: 430g | Calories: 110kcal | Carbohydrates: 9g | Protein: 13g | Cholesterol: 1mg | Potassium: 89mg | Vitamin A: 3IU