ஆயுத பூஜை ஸ்பெஷல் வாழைக்காய் வாங்கி இப்படி செஞ்சி பாருங்க பார்த்தாலே நாவில் எச்சி ஊறும்!

- Advertisement -

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. அந்த வகையில் வாழைக்காயை வறுவலாகவும், குழம்பாகவும் நம்முடைய உணவுகளில் சேர்த்துக்கொள்ளலாம்.

-விளம்பரம்-

ஆனால் எப்போதும் செய்யும் வாழைக்காய் வறுவல் போர் அடிக்குதா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள வாழை இலை வாழைக்காய் வறுவலை செய்து சுவைத்து பாருங்கள். வாழைக்காய் வறுவல் சாதாரணமாக சட்டியிலோ அல்லது தோசை கல்லிலோ மசாலவை தடவி அப்படியே வறுத்துதான் சாப்பிடுவோம். ஆனால் கேரளா ஸ்டைலில் பொழிச்ச வாழைக்காய் என்று சொல்லப்படும் வாழைக்காய் வறுவல் வாழை இலை வைத்து செய்வது. வாழையிலை மசாலா வாழைக்காய் ரெசிபி கேரளாவில் சமைக்கப்படும் பிரேத்தியகமான வாழைக்காய் வறுவல்.

- Advertisement -

இது வாழையிலையில் வைத்து சமைக்கப்படுவதால் பிரமாதமான சுவையுடன் மணமாக இருக்கும். வாழை இலை வாழைக்காய் கேரளாவில் மிகவும் பிரபலமான உணவு. பொதுவாக கரிமீன் என்ற வகை மீனை கொண்டு தான்‌ இந்த ரெசிபியை செய்வார்கள். இருப்பினும் இதனை வாழைக்காயை பயன்படுத்தியும் செய்யலாம். இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது செய்வது மிகவும் சுலபம். அதனுடன் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

Print
4 from 1 vote

வாழைக்காய் பொழிச்சது | Vaazhakkai Pollichathu recipe in tamil

முக்கனிகளுள் ஒன்றாக வாழை உள்ளது. வாழையின் இலை முதல் பழம் வரை பல்வேறு மருத்துவ குணங்களையும் நன்மைகளையும் உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. மேலும் நம்முடைய அன்றாட உணவுகளிலும் சேர்த்துக்கொள்ளும் ஒன்றாகவும் உள்ளது. வாழைக்காய் வறுவல் சாதாரணமாக சட்டியிலோ அல்லது தோசை கல்லிலோ மசாலவை தடவி அப்படியே வறுத்துதான் சாப்பிடுவோம். ஆனால் கேரளா ஸ்டைலில் பொழிச்ச வாழைக்காய் என்று சொல்லப்படும் வாழைக்காய் வறுவல் வாழை இலை வைத்து செய்வது. இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
Prep Time20 minutes
Active Time15 minutes
Total Time35 minutes
Course: LUNCH
Cuisine: Indian, Kerala
Keyword: Valakkai varuval
Yield: 3 People
Calories: 340kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 தவா
  • 1 பவுள்

தேவையான பொருட்கள்

வாழைக்காய் ஊற‌ வைக்க

  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/4 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • உப்பு தேவையான அளவு
  • 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்

கிரேவி செய்ய

  • 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/2 கப் நறுக்கிய சின்ன வெங்காயம்
  • 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/4 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
  • 1/4 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/4 டீஸ்பூன் மல்லி தூள்
  • 1/2 கப் தேங்காய் பால்

செய்முறை

  • முதலில் வாழைக்காயை நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு, சீவிக் கொள்ளவும்.
  • பின்னர் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு பவுளில் சேர்த்து நன்கு கலந்து பின் வாழைக்காயை சேர்த்து 15 நிமிடங்கள் வரை ஊற‌ வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • சிறிது நேரம் கழித்து தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லி தூள், சீரகத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கலந்து விட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பச்சை வாசனை போனவுடன் தேங்காய் பால் சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்க விடவும். இது சற்று சுண்டி கிரேவி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  • பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற‌ வைத்த வாழைக்காயை பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • அதன்பிறகு ஒரு வாழையிலையில் நாம்‌ செய்து வைத்த கிரேவியை வைத்து அதன் மேல் பொரித்த வாழைக்காயை வைத்து பின்‌ அதன்‌ மேல் மறுபடியும் கிரேவியை வைத்து ஒரு பொட்டலம் போல் நூலால் கட்டிக் கொள்ளவும்.
  • ஒரு தவாவை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி பொட்டலத்தை வைத்து இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.
  • அவ்வளவுதான் சுவையான வாழைக்காய் பொழிச்சது தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 340kcal | Carbohydrates: 82.1g | Protein: 9g | Sodium: 21mg | Potassium: 149mg | Fiber: 8.5g | Calcium: 22mg