பெருமளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சாம்பார், கார குழம்பு, மீன் குழம்பு, கறி குழம்பு, கீரை போன்ற குழம்பு வகைகள் தான் செய்வதுண்டு. ஒரு சில வீடுகளில் தயிரை தினமும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவார்கள். ஆனால் ஒருமுறை இவ்வாறு உழுந்து வடை செய்து மோர்க்குழம்புடன் ஊற வைத்து சாதத்துடன் சேர்த்து சுவைத்துப் பாருங்கள்.
மிகவும் அருமையான சுவையில் இருக்கும். இவ்வாறு வித்தியாசமான உணவு வகைகளை அனைவரும் விருப்பமாகவே சாப்பிடுவார்கள். என்றாவது ஒருநாள் உங்களது தினத்தை ஸ்பெஷலாக மாற்ற இவ்வாறு மோர்க்குழம்பு செய்து பாருங்கள்.
குழம்பு வகைகளிலே மிகவும் சுலபமாகவும் சீக்கிரமாகவும் செய்யக்கூடிய ஒரு குழம்பு எனில் அது மோர் குழம்பு தான. இதை செய்வது சுலபம் எனினும் ருசி அட்டகாசமாக இருக்கும். ஆனாலும் பலருக்கு மோர் குழம்பு பிடிக்காது. இந்த சமையல் குறிப்பு பதிவில் அனைவருக்கும் பிடிக்கும்படியான ஒரு மோர் குழம்பை அதுவும் வடை சேர்த்து எப்படி சுவையாக செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
வடை மோர் குழம்பு | Vadai Mor Kulambu Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1 கப் உளுந்து
- 1 தேக்கரண்டி பச்சரிசி
- 1 தேக்கரண்டி துவரம் பருப்பு
- 2 பச்சை மிளகாய்
- 2 கப் தயிர்
- 1 பொடியாக நறுக்கிய வெங்காயம்
- 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- கறிவேப்பிலை சிறிது
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
தாளிக்க
- கடுகு சிறிது
- சீரகம் சிறிது
- உளுந்து சிறிது
- கடலை பருப்பு சிறிது
செய்முறை
- உளுந்து ஊற வைத்து, உப்பு சேர்த்து கெட்டியாக (வடை மாவு பதத்தில்) அரைக்கவும், * பச்சரிசி, துவரம் பருப்பும் தண்ணீர் வீட்டு ஊற வைத்து, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக. அரைக்கவும். 1 கப் தயிரில் தண்ணீர் சேர்த்து அடித்து மோர் ஆக்கவும்.
- பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும். இதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- இத்துடன், அரைத்த மசாலா, மோர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- அரைத்த உளுந்து மாவை வடை போல் தட்டி, எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மோர்குழம்பு கொதித்ததும் ஆர விடவும்.
- ஆரிய பின் இதில் மிச்சம் இருக்கும் 1 கப் தயிர் ஊற்றி கலந்து, சுட்ட வடை போட்டு ஊற விட்டு பிறகுபரிமாறவும்.