நாம் அனைவருமே இந்த உலகில் நன்கு ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்றால் அதற்கு நமக்கு மிகவும் உதவுவது உணவுகள் தான். அப்படி நமது ஆரோக்கியத்தை சரியாக பராமரிக்க உதவும் உணவுகளை ஒரு சிலர் எடுத்து கொள்ள மறுப்பார்கள். அதிலும் குழந்தைகள் தங்களுக்கு பிடித்த உணவு என்றால் அதிக அளவு சாப்பிடுவார்கள். ஆனால் அவர்களுக்கு பிடிக்காத உணவு என்றால் அதனை முற்றிலும் ஒதுக்கி விடுவார்கள். அப்படி அவர்களால் ஒதுக்கப்படும் பல உணவுகளில் ஒன்று தான் இந்த வாழைப்பூ. ஆனால் வாழைப்பழம் மட்டுமல்ல, அதன் பூவும், தண்டும் கூட மருத்துவ குணம் கொண்டவை. எனவே மாதத்தில் இரண்டு மூன்று நாள்களாவது வாழைப்பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது! அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்ட வாழைப்பூவில், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு சத்து, தாமிர சத்து முதலிய சத்துக்கள் நிறைந்துள்ளன.
பெண்களின் கர்ப்பப்பை நலன் காக்க வாழைப்பூ மிகவும் நல்லது. பொதுவாக நாம் அடிக்கடி கேரட், பட்டாணி, கோஸ், பீன்ஸ், முருங்கைக்காய் போன்றவற்றை அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். வாழைப்பூ போன்ற துவர்ப்பு சுவை கொண்ட காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், மலட்டுத்தன்மை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும். வாழைப்பூவில் பொரியல் செய்து கொடுத்தாலோ குழம்பு செய்து கொடுத்தாலோ கட்டாயமாக வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வேண்டாம் என்று தான் சொல்வார்கள். அதனால் இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவில் முருங்கைக்கீரை சேர்த்து எப்படி பொரியல் செய்வது என்பதை பார்க்கலாம்! இந்த வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல் மிகவும் சுவையாக இருப்பதோடு, செய்வதற்கு சற்று சுலபமாகவும் இருக்கும்.
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல் | Valaipoo Murungaikeerai Poriyal Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1 கப் வாழைப்பூ
- 1 கப் முருங்கை கீரை
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 டீஸ்பூன் கடுகு
- 1/2 டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
- 1 கொத்து கறிவேப்பில்லை
- 1 பெரிய வெங்காயம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் முருங்கைக்கீரை நன்கு அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும். வாழைப்பூ மற்றும் வெங்காயத்தை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்கவும்.
- பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய வாழைப்பூ, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- வாழைப்பூ நன்கு வெந்ததும், கீரையை சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக விடவும்.
- பின் கீரை நன்கு வதங்கியதும் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : சூப்பரான வாழைப்பூ தயிர் வடை இப்படி செஞ்சி பாருங்க! அட்டகாசமான சுவையில் இருக்கும்!