அடுத்தமுறை வல்லாரை கீரை வாங்கினால் ருசியான வல்லாரை கீரை சாதம் இப்படி செஞ்சி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதவிதமாக கீரை சாதம் ச

By Prem Kumar · 21/12/2023

நாம் குழந்தைகளுக்கு அதிகப்படியாக செய்து கொடுக்கும் சாம்பார் சாதம், தக்காளி சாதம், லெமன் சாதம் மற்றும் தயிர் சாதம் இது போன்ற இந்த நான்கு சாதத்தை மட்டும் மாற்றி மாற்றி தயார் செய்து உணவாக கொடுப்போம். இது சாப்பிட்டு நமக்கே சலித்து போய் இருக்கும் அதற்காக நீங்கள் புதவிதமாக கீரை சாதம் செய்து கொடுக்கலாம். பொதுவாகவே குழந்தைகள் மற்ற உணவுகளை உண்பதைவிட கீரைகளை மிகவும் குறைவாகவே உண்கின்றனர். அந்த வகையில் கீரைகளை உண்ணாத குழந்தைகளுக்கு இதைப்போல் கீரை சாதம் செய்துகொடுக்கலாம். ஆம், இன்று நாம் வல்லாரை கீரை சாதம் பற்றி தான் பார்க்க இருக்கிறோம்.

வல்லாரை கீரை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஞாபக சக்தியை அதிகரிக்கும் என்பதுதான். வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் தாது உப்பு அதிகமாக நிறைந்துள்ளது. காலையில் எழுந்தவுடன் தினமும் வல்லாரை கீரையினை பச்சையாக மென்று சாப்பிட்டுவர மூளை பகுதியில் இருக்கும் நரம்புகள் பலம் பெரும், அதுமட்டுமல்லாமல் ஞாபக சக்தியும் அதிகரிக்க செய்யும். வல்லாரை கீரை உடலுக்கு மிகவும் நல்லது குறிப்பாக மாணவர்கள் வல்லாரை கீரை சாப்பிட்டால் அவர்களின் நினைவாற்றல் திறன் அதிகரிக்கும். இதுவரை வல்லாரைக் கீரையை நீங்கள் சட்னியாகவோ, பொரியலாகவோ செய்திருக்கலாம். ஆனால் அடுத்தமுறை வல்லாரை கீரையை சாதம் போல் செய்து கொடுங்கள். இந்த வல்லாரை கீரை சாதம் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு சுவையாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ருசியான மாங்காய் தக்காளி சாதம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்களேன்! திரும்ப திரும்ப செய்து சாப்பிட தோன்றும்!

Recipes AMP · Quick view
View full