வரகரசியை வைத்து பஞ்சு போன்ற ஆப்பம் இப்படி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி தான்!

- Advertisement -

பலரும் புழுங்கலரிசி பச்சரிசியை சேர்த்து ஆப்பம் செய்வார்கள் . ஆனால் வரகு அரிசியில் கூட  பஞ்சு போல சுவையான ஆப்பம் எளிதாக தயாரிக்க முடியும்! வரகு அரிசி கொண்டு இது போல நிறைய விஷயங்களை நாம் ஆரோக்கியமான முறையில் உணவுகள் தயாரிக்க முடியும். வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. ஆரோக்கியமான சத்தான மற்றும் உடல் எடை குறையவும் வரகு உணவு நல்ல தீர்வாக இருக்கும்.

-விளம்பரம்-

பச்சரிசி, உளுந்து எல்லாம் சேர்த்து செய்யப்படும் ஆப்பம் பொதுவாக எல்லோரும் செய்வது தான். வரகு அரிசியில் ஆப்பம் அருமையாக இருக்கும். ஆப்பம் என்றால் நடுவில் பஞ்சு போன்று தடிமனாகவும், முனையை சுற்றிலும் மெலிதாக மொறுமொறுவென்று இருக்க வேண்டும். நம் வீட்டில் இதே மாதிரி  வரகரிசி ஆப்பம் அருமையாக செய்து விடலாம். வாங்க இதை எப்படி செய்யலாம் என்று பார்ப்போம்.

- Advertisement -
Print
No ratings yet

வரகரசி ஆப்பம் | Varagu Arisi Appam Recipe In Tamil

பச்சரிசி, உளுந்து எல்லாம் சேர்த்து செய்யப்படும்ஆப்பம் பொதுவாக எல்லோரும் செய்வது தான். வரகு அரிசியில் ஆப்பம் அருமையாக இருக்கும்.ஆப்பம் என்றால் நடுவில் பஞ்சு போன்று தடிமனாகவும், முனையை சுற்றிலும் மெலிதாக மொறுமொறுவென்றுஇருக்க வேண்டும். நம் வீட்டில் இதே மாதிரி வரகரிசி ஆப்பம் அருமையாக செய்து விடலாம். வாங்க இதை எப்படி செய்யலாம் என்றுபார்ப்போம்.
 
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner
Cuisine: tamil nadu
Keyword: Varagu Arisi Appam
Yield: 4
Calories: 250kcal

Equipment

  • 1 ஆப்ப கடாய்
  • 1 பெரிய பவுள்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கப் வரகரிசி
  • 1/2 கப் புழுங்கலரிசி & பச்சரிசி இரண்டும் சேர்த்து
  • 1/4 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 டீஸ்பூன் உளுந்து
  • 1/4 கப் தேங்காய் தண்ணி
  • 1/4 கப் துருவிய தேங்காய்
  • சோடா உப்பு தேவையான அளவு
  • 1 சிட்டிகை சர்க்கரை
  • 1 சிட்டிகை ஏலக்காய்த்தூள்

செய்முறை

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்துக் களைந்து கொள்ளவும்,
  • இக்கலவையுடன் தண்ணீர் விட்டு நன்கு களைந்த வரகரிசியை ஒன்றாகச் சேர்த்து மூழ்குமளவுக்கு நீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • பிறகு தண்ணீரை வடித்துவிடவும். இதனுடன் தேங்காய் சேர்த்து கெட்டியாக மைபோல் அரைக்கவும்.
  • அரைத்த மாவில் உப்பு சேர்த்து இரவு முழுவதும் வைத்து மறுநாள் காலை தேங்காய் தண்ணி , சர்க்கரை சோடா உப்பு, ஏலக்காய்த் தூள் சேர்த்து தோசை மாவை விட சற்றுத் தளர்வாகக் கரைத்துக்கொண்டு, ஆப்பச் சட்டியில் ஆப்பமாக வார்த்து எடுக்கவும்.

Nutrition

Serving: 2nos | Calories: 250kcal | Carbohydrates: 47g | Protein: 21g | Saturated Fat: 0.6g | Sodium: 3mg | Potassium: 366mg | Fiber: 10.3g | Sugar: 1.1g | Calcium: 4mg | Iron: 8mg