Advertisement
சைவம்

புளி சாதம் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்ம இப்படி வரகரிசியில் புளிசாதம் செய்து கொடுத்தால்!

Advertisement

மணக்க மணக்க அருமையான புளியோதரை வரகு அரிசியில் ஒருமுறை செய்து பாருங்கள். வரகு அரிசி உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்தும்.மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சரிசெய்யவும் உதவுகிறது

வரகரிசி, சிறுதானியங்களில் ஒன்று.   புளியோதரை என்றாலே அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று. வரகரிசியில் சட்டுன்னு அருமையான புளியோதரை செய்து அசத்த முடியும்.

Advertisement

ஊருக்கு செல்லும் பொழுது நம்முடைய முன்னோர்கள் கட்டி சோறு கட்டிக்கொண்டு சென்றனர். அந்த கட்டி சோறு என்பதுதான் புளிசாதம். அது இரண்டு நாள் வரை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.அப்படி நாம் செய்யக்கூடிய புளி சாதத்தை வரகரிசி உபயோகப்படுத்தி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

வரகரிசி புளிசாதம் | Varagu Arisi PuliSaadham

Print Recipe
மணக்க மணக்க அருமையான புளியோதரை வரகு அரிசியில்ஒருமுறை செய்து பாருங்கள். வரகு அரிசி உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்தும்.மேலும் இதில்நார்ச்சத்து நிறைந்திருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தைசரிசெய்யவும் உதவுகிறது. அப்படி நாம் செய்யக்கூடிய புளி சாதத்தை வரகரிசிஉபயோகப்படுத்தி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில்நாம் பார்க்க போகிறோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
Advertisement
Course LUNCH
Cuisine tamil nadu
Keyword Varagu Arisi Puli Sadham
Prep Time 5 minutes
Cook Time 9 minutes
Servings 4
Calories 72

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 3/4 கப் வரகரிசி
  • 1 பெரிய நெல்லிக்காய் அளவு புளி
  • 4 மிளகாய் வற்றல்
  • வேர்க்கடலை சிறிது
  • 2 கொத்து கறிவேப்பிலை
  • 1 மேசைக்கரண்டி எண்ணெய்
  • கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு
    Advertisement
    தாளிக்க
  • பெருங்காயம் சிறிது
  • உப்பு தேவையான அளவு
  • மஞ்சள் தூள் சிறிது

Instructions

  • வரகரிசியைக் களைந்து நீரை வடித்துவிட்டு வைக்கவும். ஒரு கப் நீரில் புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
  • குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, மிளகாய் வற்றல். வேர்க்கடலை மற்றும் பெருங்காயம் சேர்த்து
  • அதனுடன் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கிவிட்டு, புளி கரைசல், மற்றும் அரை கப் நீர் (முக்கால் கப் வரகரிசிக்கு ஒன்றரை கப் நீர் என்ற அளவில்) ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்றாகக் கொதித்ததும் வரகரிசியைச் சேர்த்து கலந்துவிடவும்.ப்ரெஷர் அடங்கியதும் திறந்து கிளறிவிடவும்.
  • மீண்டும் கொதிக்கத் துவங்கியதும் அடுப்பை சிறு தீயில் வைத்து குக்கரை மூடி 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
  • குழையாமல் உதிரியான சுவையான சத்தான வரகரிசி புளி சாதம் தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 72kcal | Protein: 14g | Sodium: 2mg | Potassium: 107mg

இதையும் படியுங்கள் : மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கும் ருசியான சுக்கு குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்!

Advertisement
Prem Kumar

Recent Posts

ஒரு முறை சுவையான இந்த கறிவேப்பிலை மிளகு சிக்கன் செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள்!!

பொதுவாக அசைவம் என்றால் பெரும்பாலானவர்களுக்கு பிடிக்கும், அதுவும் வீக்கென்ட் என்றால் அசைவம் இல்லாமல் இருக்காது, வாரத்தில் ஒரு நாள் சாப்பிட்டே…

5 மணி நேரங்கள் ago

மொறு மொறுவென்று பச்சை பயறு அடை தோசை இனி இப்படி செய்து பாருங்கள் இரண்டு தோசை அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 19 மே 2024!

மேஷம் இன்று உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். இன்று உங்களுக்கு மிகவும் பயனுள்ள நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு விலை…

13 மணி நேரங்கள் ago

வைகாசி விசாகத்தில் முருகப் பெருமானை வழிபட வேண்டிய நேரம்

உலகோர் அனைவருக்கும் தெய்வமாக, ஸ்கந்தன், சுப்பிரமணியன், விசாகன் என்று பல்வேறு திருநாமங்களோடு அருள்பவன் முருகன். அந்த அழகனை, 'தமிழ்க் கடவுள்'…

23 மணி நேரங்கள் ago

ஈவினிங் டைம்ல சாப்பிடுவதற்கு இந்த மாதிரி சுட சுட சிக்கன் ரோல் ஒரு தடவை செஞ்சு பாருங்க!

பொதுவா நமக்கு சிக்கன் ரோல் சிக்கன் பப்ஸ் கேக் சமோசா அந்த மாதிரி சாப்பிடனும் போல இருந்துச்சுன்னா அதுக்குன்னு நம்ம…

1 நாள் ago

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

1 நாள் ago