மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கும் ருசியான சுக்கு குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்!

- Advertisement -

சாப்பிடுவதற்கு எப்படி சாதம் முக்கியமோ அதே அளவிற்கு சாதத்துடன் சேர்த்து சாப்பிட குழம்பும் மிக முக்கியமாகும். தினம் ஒரு குழம்பு வைப்பதென்பது மிகவும் யோசித்து செய்யக்கூடிய வேலைதான். ஒரு நாள் வைத்த குழம்பை மறுநாளும் சமைக்க முடியாது. எனவே ஒவ்வொரு நாளும் மதிய வேளைக்கென்று புது புது குழம்பினையே சமைக்க வேண்டும். வேலைப்பளு அதிகம் இருக்கும் நாட்களில் சீக்கிரத்தில் சமைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த சமயங்களில் எளிதில் சமைப்பதற்கு இந்த சுக்கு குழம்பும் ஏற்றதாக இருக்கும்.

-விளம்பரம்-

வீட்டில் காய்கறி இல்லையா? அப்போ உடனே இந்த சுக்கு குழம்பை ட்ரை செய்து பார்க்கலாம். எங்கேயாவது வெளியூருக்கு பயணம் செய்யப் போவதாக இருந்தாலும் இந்த சுக்கு குழம்பினை உடன் எடுத்துச் செல்லலாம். நான்கு நாட்கள் ஆனாலும் வீணாகாமல் இருக்கும். மருத்துவ குணம் நிறைந்த ஒரு உணவுப் பொருளான சுக்கு , சளி இருமல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது. இவ்வாறு பல வழிகளில் பலன் தரக்கூடிய இந்த சுக்கினை வைத்து செய்யக்கூடிய சுவையான சுக்கு குழம்பினை எவ்வாறு சமைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -
Print
3.34 from 3 votes

சுக்கு குழம்பு | Dry Ginger Kulambu Recipe In Tamil

வீட்டில் சுக்கு குழம்பை ட்ரை செய்து பார்க்கலாம். எங்கேயாவதுவெளியூருக்கு பயணம் செய்யப் போவதாக இருந்தாலும் இந்த சுக்கு குழம்பினை உடன் எடுத்துச்செல்லலாம். நான்கு நாட்கள் ஆனாலும் வீணாகாமல் இருக்கும். மருத்துவ குணம் நிறைந்த ஒருஉணவுப் பொருளான சுக்கு , சளி இருமல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக உள்ளது. இவ்வாறுபல வழிகளில் பலன் தரக்கூடிய இந்த சுக்கினை வைத்து செய்யக்கூடிய சுவையான சுக்கு குழம்பினைஎவ்வாறு சமைப்பது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Dry Ginger Kulambu
Yield: 4
Calories: 99.93kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • சுக்கு விரல் அளவுதுண்டு
  • புளி கோலி அளவு
  • 5 சின்ன வெங்காயம்
  • 1 தக்காளி
  • 10 பூண்டு
  • 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1/2 தேக்கரண்டி மிளகு
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 1/2 தேக்கரண்டி வெந்தயம்
  • 1/2 தேக்கரண்டி தனியா
  • 1/2 தேக்கரண்டி எள்
  • பெருங்காயம் தேவையான அளவு
  • கொத்தமல்லித் தழை தேவையான அளவு
  • எண்ணெய் தாளிக்க
  • கடுகு தாளிக்க
  • சீரகம் தாளிக்க
  • கறிவேப்பிலை தாளிக்க
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • வெறும் வாணலியில் மிளகு, சீரகம், வெந்தயம், தனியா, எள், நசுக்கிய சுக்கு சேர்த்து சிவக்க வறுத்து ஆறவிட்டு பொடிக்கவும்.
  • புளியை ஊறவைத்து கரைத்து, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  • வதக்கியவற்றை புளிக்கரைசலில் சேர்த்து கொதிக்கவிட்டு, நன்கு சுண்டி வந்ததும் அரைத்த பொடி சேர்த்து ஒரு கொதிவிட்டு கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

செய்முறை குறிப்புகள்

அஜீரணம், வாயுத்தொல்லை, தொண்டைக்கட்டு உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற சுக்கு குழம்பு தயார்.காரம் குறைவாக சேர்த்தும் செய்யலாம்.

Nutrition

Serving: 600g | Calories: 99.93kcal | Carbohydrates: 13.91g | Protein: 3.49g | Sodium: 54.88mg | Potassium: 77.95mg | Fiber: 1.27g | Calcium: 24.71mg | Iron: 0.21mg

இதையும் படியுங்கள் : கேரளா ஸ்பெஷல் இஞ்சி புளி சிக்கன் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க! இவ்வளவு டேஸ்ட்டான்னு நீங்களே ஆச்சரியப்படுவீங்க!