மணக்க மணக்க அருமையான புளியோதரை வரகு அரிசியில் ஒருமுறை செய்து பாருங்கள். வரகு அரிசி உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்தும்.மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சரிசெய்யவும் உதவுகிறது
வரகரிசி, சிறுதானியங்களில் ஒன்று. புளியோதரை என்றாலே அனைவர்க்கும் பிடித்தமான ஒன்று. வரகரிசியில் சட்டுன்னு அருமையான புளியோதரை செய்து அசத்த முடியும்.
ஊருக்கு செல்லும் பொழுது நம்முடைய முன்னோர்கள் கட்டி சோறு கட்டிக்கொண்டு சென்றனர். அந்த கட்டி சோறு என்பதுதான் புளிசாதம். அது இரண்டு நாள் வரை கெட்டுப் போகாமல் நன்றாக இருக்கும்.அப்படி நாம் செய்யக்கூடிய புளி சாதத்தை வரகரிசி உபயோகப்படுத்தி எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
வரகரிசி புளிசாதம் | Varagu Arisi PuliSaadham
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 3/4 கப் வரகரிசி
- 1 பெரிய நெல்லிக்காய் அளவு புளி
- 4 மிளகாய் வற்றல்
- வேர்க்கடலை சிறிது
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1 மேசைக்கரண்டி எண்ணெய்
- கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு தாளிக்க
- பெருங்காயம் சிறிது
- உப்பு தேவையான அளவு
- மஞ்சள் தூள் சிறிது
செய்முறை
- வரகரிசியைக் களைந்து நீரை வடித்துவிட்டு வைக்கவும். ஒரு கப் நீரில் புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
- குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, மிளகாய் வற்றல். வேர்க்கடலை மற்றும் பெருங்காயம் சேர்த்து
- அதனுடன் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கிவிட்டு, புளி கரைசல், மற்றும் அரை கப் நீர் (முக்கால் கப் வரகரிசிக்கு ஒன்றரை கப் நீர் என்ற அளவில்) ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.நன்றாகக் கொதித்ததும் வரகரிசியைச் சேர்த்து கலந்துவிடவும்.ப்ரெஷர் அடங்கியதும் திறந்து கிளறிவிடவும்.
- மீண்டும் கொதிக்கத் துவங்கியதும் அடுப்பை சிறு தீயில் வைத்து குக்கரை மூடி 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
- குழையாமல் உதிரியான சுவையான சத்தான வரகரிசி புளி சாதம் தயார்.
Nutrition
இதையும் படியுங்கள் : மருத்துவ குணங்கள் கொட்டி கிடக்கும் ருசியான சுக்கு குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்களேன்!