உலகத்தில் உள்ள மனிதர்கள் பலருமே ஏதாவது ஒரு விசயத்திற்காக கடன் வாங்கியிருப்பார்கள். கடன் பிரச்சனை என்பது தற்போது மிகவும் சர்வ சாதாரணம் ஆகி விட்டது. கடன் வாங்குவது தவறு என்றாலும் சூழ்நிலை காரணமாக கடன் வாங்கி விட்டு, பிறகு அதை திருப்பி அடைக்க முடியாமல், எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என புலம்புகிறவர்கள் தான் அதிகம். பலருக்கும் கடன் பிரச்சனை என்பது பெரிய பிரச்சனையாக இருந்து கொண்டே இருக்கும். கடனை அடைப்பதற்காக எவ்வளவு முயற்சி எடுத்தாலும் எதுவும் பலன் அழிக்கவில்லை. இதனால் கடன் இருந்து கொண்டே இருக்கிறது என புலம்புபவர்களை தான் அதிகமாக பார்க்க முடியும்.
கடன் வாங்கும் முன் யோசித்தாலே நாம் கடன் வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம். நெருக்கடியான சூழல் வரும் பொழுதும் தான் கடன் வாங்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். ஆனால் இந்தக் கடனை உடனே திருப்பி செலுத்த முடியாமல் நிறைய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்கிறார்கள். நம்முடைய கடன் பிரச்சினை தீர நம்முடைய முன்னோர்கள் பல பரிகாரங்கள் மற்றும் வாஸ்து முறைகளை கூறி வைத்துள்ளனர். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன செய்யலாம் என்று இந்த ஆன்மீகப் பதிவில் பார்க்கலாம்.
நிலைவாசல்
வாஸ்து ரீதியாக நம் வீட்டு நிலைவாசல் என்பது மிகவும் முக்கியமான ஒரு இடமாக கருதப்படுகிறது. நிலைவாசலில் குலதெய்வம் குடியிருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகிறது. அதனால் நிலைவாசலில் எப்பொழுதும் செருப்பு, ஷூ, துடைப்பம் போன்ற பொருட்களை வைக்காமல் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒரு வேளை வீட்டு வாசலில் நாம் காலணிகளை வைத்தால் குலதெய்வம் நம் வீட்டிற்கு வராது. அதனால் வாசலுக்கு பக்கத்தில் ஓரமாக காலணிகளை வைக்கலாம்.
வரவேற்பு அறை
உறவுகள் கூடி மகிழும் அறை வரவேற்பு அறை. விருந்தினர்களை வரவேற்கவும் குடும்பத்தினர் கூடி ஆலோசனை செய்யவும் பயன்படுத்தும் அறை வரவேற்பு அறை. நாம் வரவேற்பு அறையில் வைக்கும் எந்த பொருட்களும் களைந்த நிலையில் இருக்கக் கூடாது. அதுமட்டுமல்லாமல் அங்கு நாம் வைத்திருக்கும் பொம்மைகள், மர சிற்பங்கள், தொலைக்காட்சி, சோபா, மேஜை நாற்காலி, ஜன்னல் போன்றவைகள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். இதனால் நம்முடைய வீடு அனந்தமாக இருக்கும்.
படுக்கையறை
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளக்கூடிய இடம் தான் படுக்கை அறை. படுக்கையின் விரிப்பு, தலையணை உறைகளை வாரத்திற்கு ஒரு முறை துவைக்க வேண்டும். படுக்கை விரிப்பு எப்போதும் மூடிய நிலையில் இருக்கக் கூடாது. அதுமட்டுமல்லாமல் படுக்கையறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். படுக்கையறை சுத்தமாக இல்லையென்றால் வாஸ்து குறைபாடு ஏற்படுத்துவதோடு, எதிர்மறை ஆற்றலும் அதிகரிக்கலாம். படுக்கையறையை சுத்தமாக வைத்திருந்தால் திருமண வாழ்க்கை மற்றும் நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
கடிகாரங்கள்
கடிகாரம் இல்லாத வீடு இருக்காது. தாத்தா பாட்டி காலத்தில் கடிகாரம் என்பது அத்தியாவசிய பொருளாக உள்ளது. நம்முடைய நேரத்தை நல்ல நேரமாக மாற்றக்கூடிய சக்தி கடிகாரத்திற்கு உள்ளது. அதனால் நம்முடைய வீட்டில் ஓடாத கடிகாரம் அல்லது உடைந்த கடிகாரத்தை வீட்டில் வைத்திருக்க கூடாது. அதுமட்டுமல்லாமல் கடிகாரம் தாமதமாகவும் ஓடக்கூடாது. நம்முடைய வீட்டில் வடக்கு பக்கத்தில் கடிகாரம் மாட்டினால் கடன் தீர்த்து செல்வ வளம் பெருகும்.
வடகிழக்கு மூலை
வீட்டில் உள்ள எட்டு திசைகளும் வடக்கு மற்றும் கிழக்கு திசைகள் சந்திக்கும் வடகிழக்குத் திசை இது முக்கியத்துவம் வாய்ந்தது. வடகிழக்கு மூலை உங்கள் வீட்டிற்கு மிகவும் மங்களகரமான இடம். இந்த குறிப்பிட்ட மூலை ஆன்மீக மற்றும் மத அம்சங்களை குறிக்கின்றது. இது எம்பெருமான் ஈசன் வசிக்கும் இடமாகும். எனவே இந்த பகுதி ஈசான்ய மூளை என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலை காற்றோட்டம் இறக்கிற வகையிலும், நன்றாக சூரிய ஒளி வருகிற மாதிரியும் இருக்க வேண்டும். இந்த மூலையில் செயற்கை நீருற்று அல்லது நீருற்று போன்ற படங்களை வைக்கலாம். இதனால் வீட்டில் செல்வ வளம் மிகவும் அதிகரிக்கும்.
இரும்பு பொருட்கள்
வீட்டில் அதிகமாக இரும்பு சார்ந்த பொருட்களை வைக்க கூடாது, வாங்கியும் வர கூடாது. இரும்பு பொருட்கள் சனிபகவானின் அம்சம் என்பதால் இதனை அதிகமாக வீட்டில் வைக்கும் பொழுது சனி பகவானின் மிக பெரிய கோவத்திற்கு ஆளாக நேரிடும். இதனால் வீட்டில் கடன் தொல்லை அதிகரிக்கும். அதனால் முடிந்த அளவு இரும்பு பொருட்களை வீட்டில் வைப்பதை தவிர்த்து விடுங்கள்.
தென்கிழக்கு திசை
ஒரு வீட்டின் தென் கிழக்கு திசை தான் அக்னி மூலை. நம்முடைய வீட்டில் சமையல் அறை இருக்கும் இடம் அக்னி மூலைதான். இங்கு கழிவறை போன்ற நீர் சார்ந்த வேறு எந்த ஒரு விஷயமும் அமைய பெற்றிருக்கக் கூடாது. அக்னி இருக்கும் இடத்தில் நீர் இருந்தால் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துமாம். மேலும் இந்த மூலையில் குப்பையை கூட்டி க்ஷகுவிக்க கூடாது.
டைனிங் டேபிள்
டைனிங் டேபிள் என்பது வெறும் உணவு உண்பதற்கான இடம் என்று சொன்னாலும் அது நம் வாழ்வில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் டைனிங் டேபிள் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அதில் தேவையற்ற பொருட்களை வைக்க கூடாது. அத்துடன் சாப்பிட்ட பாத்திரங்கள் அதில் நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நமது வீட்டின் செல்வம் மற்றும் பொருளாதார நிலை மேம்படுகிறது என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது.
இதனையும் படியுங்கள் : வாஸ்து படி இதை மட்டும் இதை மட்டும் செய்யுங்கள் வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்!