கல்யாண வீடுகளில் தரப்படும் வத்த குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் ஒரு போதும் எப்படி செய்வதென்று சிலருக்கு தெரியாது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். கல்யாண வீட்டு வத்த குழம்பு அதே சுவையில்
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் ; ரசம் சாதம் குக்கரில் இப்படி சட்டுனு செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி தான்!
வீட்டில் எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த வத்த குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
கல்யாண வத்த குழம்பு | Vatha Kulambu Recipe In Tamil
கல்யாண வீடுகளில் தரப்படும் வத்த குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் ஒரு போதும் எப்படி செய்வதென்று சிலருக்கு தெரியாது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். கல்யாண வீட்டு வத்த குழம்பு அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த வத்த குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Equipment
- கடாய்
தேவையான பொருட்கள்
வறுத்து அரைக்க:
- 2 ஸ்பூன் கடலை பருப்பு
- 2 ஸ்பூன் துவரம் பருப்பு
- 1 ஸ்பூன் வெந்தயம்
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் வர மல்லி
- 2 வர மிளகாய்
- 2 ஸ்பூன் எண்ணெய்
- சுண்டைக்காய் வத்தல் தேவையான அளவு
வதக்க:
- 1 டீஸ்பூன் கடுகு
- 20 சின்ன வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 2 தக்காளி அரைத்துக்கொள்ளவும்
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய் தூள்
- 1 ஸ்பூன் மல்லி தூள்
- 1 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
- 1 கப் புளி கரைசல் கொஞ்சம்
- 1 கப் தேங்காய் பால்
- 1 ஸ்பூன் வெல்லம்
- கருவேப்பிலை கொஞ்சம்
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு வறுத்து ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு வாணலில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சுண்ட வத்தலை வதக்கி தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து அத்துடன் அரைத்த தக்காளியை இதில் ஊற்றி கலந்து புளி கரைசல், சேர்த்து கொதிக்க விடவும்.
- கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் சுண்ட வத்தலை சேர்த்து அத்துடன் வெல்லம், கருவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- குழம்பு சுண்டியதும் அடுப்பை நிறுத்தவும்.