- Advertisement -
ரசம் சாதம் இது போன்று குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். மழை காலங்களில் மற்றும் குளிர் காலங்களில் இது போன்று ரசம் சாதம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த சாதத்துடன் வத்தல், ஊறுகாய் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : வாய்க்கு ருசியான கொள்ளு ரசம் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
அற்புதமாக இருக்கும். இந்த சாதம் செய்வதும் சுலபம், குறைந்த நேரத்தில் அதுவும் குக்கரில் சட்டுனு செய்து விடலாம். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
ரசம் சாதம் | Rasam Sadham Recipe In Tamil
ரசம் சாதம் இது போன்று குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். மழை காலங்களில் மற்றும் குளிர் காலங்களில் இது போன்று ரசம் சாதம் செய்து சாப்பிட்டால் உடலுக்கு இதமாக இருக்கும். இந்த சாதத்துடன் வத்தல், ஊறுகாய் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். அற்புதமாக இருக்கும். இந்த சாதம் செய்வதும் சுலபம், குறைந்த நேரத்தில் அதுவும் குக்கரில் சட்டுனு செய்து விடலாம். இந்த சாதம் எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Yield: 4 people
Calories: 79kcal
Equipment
- 1 குக்கர்
தேவையான பொருட்கள்
- ¾ கப் பச்சரிசி
- 2 டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு
- புளி நெல்லிக்காய் அளவு
- 1½ டீஸ்பூன் எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- ½ டீஸ்பூன் சீரகம்
- 2 கட்டி பெருங்காயம் சிறிய துண்டு
- 2 வர மிளகாய்
- 2 தக்காளி நறுக்கியது
- 5-7 பல் பூண்டு தட்டியது
- 2 பச்சை மிளகாய்
- கருவேப்பிலை கொஞ்சம்
- கொத்தமல்லி கொஞ்சம்
- உப்பு தேவையான அளவு
- ¾ டீஸ்பூன் மஞ்சள் பொடி
- 1 டீஸ்பூன் சாம்பார் பொடி
- வெள்ளம் சிறிதளவு
- மிளகு பொடித்தது கொஞ்சம்
செய்முறை
- முதலில் ரசம் சாதம் செய்வதற்கு அரிசி மற்றும் துவரம் பருப்பை 25 நிமிடம் நன்கு ஊறவேண்டும்.
- புளியை தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்னெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும், கட்டி பெருங்காயம் சேர்த்து நன்கு பொரிந்ததும் வர மிளகாய், தக்காளி, சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
- தக்காளி வதங்கும் பொழுதே பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து தக்காளி நன்கு கொழைய வதக்கவும்.
- வதங்கியதும் மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு இந்த சாதத்திற்கு 4 கப் தண்ணீர் சேர்க்கவேண்டும் அப்பொழுது புளி தண்ணீரும் கணக்கில் வைத்து ஊற்றி மீதி அளவிற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.
- எல்லாம் கலந்தபிறகு உப்பு சரிபார்த்து, அத்துடன் வெள்ளம், மற்றும் பொடித்த மிளகு சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
- கொதித்ததும் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 3 விசில் விட்டு எடுக்கவும்.
- இப்பொழுது சுவையான ரசம் சாதம் தயார்.
Nutrition
Serving: 400G | Calories: 79kcal | Carbohydrates: 67g | Protein: 4g | Cholesterol: 0.1mg | Potassium: 227mg | Sugar: 0.5g