Home சைவம் ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் இப்படி செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட...

ஆரோக்கியம் நிறைந்த வாழைப்பூ சாம்பார் இப்படி செய்து பாருங்கள் தட்டில் ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!!!

இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான். நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விடவும் முடியும். அப்படியான ஒரு வாழைப்பூ சாம்பார் ரெசிபி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். வாழைப்பூவில் கால்சியம், பொட்டாசியம், மெக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் உள்ளன.

-விளம்பரம்-

இந்நிலையில் இதில் காப்பர், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் சி இருக்கிறது. இந்நிலையில் வெயில் காலத்தில் நாம் அதிகம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சிறுநீரகத்தில் கல் ஏற்படும் இதனால், வாழைப்பூ சாப்பிட்டல் சிறுநீரக கல்லை தடுக்க முடியும். வாழைப்பூவில் பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வாழைப்பூவை வைத்து சூப்பரான சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இவற்றை உண்பதற்கு ஏற்றவாறு ருசியாக சமைத்து சாப்பிட்டால் உணவே மருந்தாகும். தினமும் மதிய உணவுக்கு என்ன குழம்பு வைக்கலாம் என்று யோசிச்சு செய்வதே கடினமான வேலை ஆகும்.

எப்போதும் கேரட், முருங்கை, என்று சிகேத காய்கறிகளை வைத்து சாம்பார் செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். வாழைப்பூவைக் கொண்டு பல வகையான உணவுகளை செய்யலாம். அதிலும் இந்த வாழைப்பூ சாம்பார் செய்து சாப்பிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இதற்கு உருளைக்கிழங்கு பொரியல் அல்லது பச்சை பட்டாணி மசாலா வைத்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Print
5 from 1 vote

வாழைப்பூ சாம்பார் | Vazhaipoo Sambar Recipe In Tamil

இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான். நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விடவும் முடியும். அப்படியான ஒரு வாழைப்பூ சாம்பார் ரெசிபி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். எப்போதும் கேரட், முருங்கை, என்று சிகேத காய்கறிகளை வைத்து சாம்பார் செய்து அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவு மிக உதவியாக இருக்கும். வாழைப்பூவைக் கொண்டு பல வகையான உணவுகளை செய்யலாம். அதிலும் இந்த வாழைப்பூ சாம்பார் செய்து சாப்பிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Vazhaipoo Sambar
Yield: 4 People
Calories: 105kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 குக்கர்

தேவையான பொருட்கள்

  • 1 கப் வாழைப்பூ
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • 1/4 டீஸ்பூன் சர்க்கரை
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2 வர ‌மிளகாய்
  • 1 கப் துவரம் பருப்பு
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 10 சின்ன வெங்காயம்
  • 1/4 கப் புளி கரைசல்
  • 2 தக்காளி

செய்முறை

  • முதலில் வாழைப்பூவை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பின் இதனை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் தக்காளி சேர்த்து ஒரு விசில் விட்டு எடுத்துக் கொள்ளவும்.
  • பின் துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள், நல்லெண்ணெய் சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் வாழைப்பூவை துவரம் பருப்பில் சேர்த்து அதனுடன் புளி கரைசல், உப்பு, சர்க்கரை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்.
  • பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பு, வெங்காயம், வர ‌மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி சாம்பாரில் சேர்த்து கலந்து விடவும்.
  • அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைப்பூ சாம்பார் தயார். சாதத்தில் நெய் விட்டு சாம்பார் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.

Nutrition

Serving: 500g | Calories: 105kcal | Carbohydrates: 2.7g | Protein: 9g | Fat: 3.1g | Sodium: 78mg | Potassium: 358mg | Fiber: 3.4g | Vitamin A: 65IU | Vitamin C: 167mg | Calcium: 27mg | Iron: 7.3mg

இதனையும் படியுங்கள் : ஒரே மாதிரியான சாம்பார் சாப்புட்டு போரடிச்சுடுச்சு அப்படின்னா இந்த மாதிரி வெள்ளை சாம்பார் ஒரு தடவை செஞ்சு பாருங்க.