கறி சுவையை மிஞ்சும் சுவையில் வாழைக்காய் சுக்கா இனி இப்படி செய்து பாருங்கள்!!
இன்று சமைக்க பிடிக்கவில்லையா? தயிர் சாதம் தான் செய்யப் போகிறீர்களா? அந்த தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தொட்டுக்க ப்ளாக் பண்ணியிருந்திங்களா? அதற்கு பதிலாக சுவையான சைடு டிஷ் ஏதாவது செய்யலாம் அல்லவா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு சுக்கா வறுவலை
இன்று சமைக்க பிடிக்கவில்லையா? தயிர் சாதம் தான் செய்யப் போகிறீர்களா? அந்த தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தொட்டுக்க ப்ளாக் பண்ணியிருந்திங்களா? அதற்கு பதிலாக சுவையான சைடு டிஷ் ஏதாவது செய்யலாம் அல்லவா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு சுக்கா வறுவலை செய்யுங்கள். இந்த வாழைக்காய் சுக்கா வறுவல் தயிர் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
பொதுவாக வாழைக்காய் வைத்து பஜ்ஜி, கிரேவி போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் வாழைக்காய் சுக்கா எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களுக்கு வித்தியாசமான உணவுகளை சாப்பிட கேட்பார்கள். வாழைக்காய் வறுவல் செய்து கொடுத்தால் சாப்பிடும் குழந்தைகள், கிரேவி அல்லது குழம்பு வைத்து கொடுத்தால் சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கு வாழைக்காய் சுக்கா செய்து கொடுத்தால் சுவைத்து சாப்பிடுவார்கள்.
இதனை மாலை வேளையில் சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் கூட இதை செய்து சாப்பிடலாம். நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. இதை நாம் குறைந்த பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி செய்து விடலாம். இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. அது மட்டுமின்றி பள்ளியிலிருந்து வரும் நம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த வாழைக்காய் சுக்கா செய்து கொடுத்தால் அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.
இதனையும் படியுங்கள் : சுவையான இறால் வாழைக்காய் குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் பின் இப்படித்தான் செய்வீர்கள்!!!