சுவையான இறால் வாழைக்காய் குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் பின் இப்படித்தான் செய்வீர்கள்!!!

- Advertisement -

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து கிரேவி, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம்.

-விளம்பரம்-

இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் இறால் வாழைக்காய் குழம்பு இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். சிக்கன், மட்டன் சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால் இந்த வார இறுதியில் இறால் வாங்கி குழம்பு வையுங்கள். இந்த இறால் வாழைக்காய் குழம்பு இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

- Advertisement -

இந்த இறால் வாழைக்காய் குழம்பு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். முக்கியமாக இந்த குழம்பானது இறால் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடும் வகையில் இருக்கும். இறால் குழம்பு சப்பாத்தி, இட்லி, தோசை, சோறு என அனைத்துடனும் ஒத்துப் போகும் ஒரு சூப்பரான அசைவ உணவாகும். இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில்‌ பார்க்கலாம்.

Print
5 from 1 vote

இறால் வாழைக்காய் குழம்பு | Prawn Valakkai Curry Recipe In Tamil

அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. எல்லோருக்கும் பிடித்தது மீன், கோழி, நண்டு, இறால் போன்றவை தான். அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அசைவ உணவு என்றால் அதில் இறாலும் ஒன்று தான். இந்த இறால் வைத்து கிரேவி, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இதனை எப்படி சமைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் இறால் வாழைக்காய் குழம்பு இதனை எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
Prep Time10 minutes
Active Time25 minutes
Total Time35 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Prawn Valakkai Curry
Yield: 4 People
Calories: 184kcal

Equipment

 • 1 பவுள்
 • 1 கடாய்
 • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

 • 1/2 கி இறால்
 • 2 வாழைக்காய்
 • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
 • 1 கொத்து கறிவேப்பிலை
 • 1 கப் சின்ன வெங்காயம்
 • 10 பல் பூண்டு
 • 2 தக்காளி
 • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
 • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
 • 1 டீஸ்பூன் மல்லி தூள்
 • உப்பு தேவையான அளவு
 • நல்லெண்ணெய் தேவையான அளவு
 • 1/4 கப் புளி கரைசல்
 • 1/4 கப் தேங்காய்
 • 1/2 டீஸ்பூன் சீரகம்
 • 1/2 டீஸ்பூன் சோம்பு

செய்முறை

 • முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து விட்டு அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும். வாழைக்காயை தோல் நீக்கி விட்டு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் தேங்காய், சோம்பு, சீரகம் ஆகியவற்றை தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
 • பின் ஒரு பவுளில் புளிக்கரைசல், தக்காளி விழுது சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
 • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெந்தயம் சேர்த்து பொன்னிறம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.
 • பின் கறிவேப்பிலை, வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
 • பின் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலா, புளி கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் மூடி வைத்து கொதிக்க விடவும்.
 • குழம்பு நன்கு கொதித்ததும் வாழைக்காய் சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும். அவ்வளவுதான் சுவையான இறால் வாழைக்காய் குழம்பு தயார்.

Nutrition

Serving: 600g | Calories: 184kcal | Carbohydrates: 6.1g | Protein: 20.4g | Fat: 4.1g | Saturated Fat: 1.9g | Sodium: 193mg | Potassium: 115mg | Fiber: 6.4g | Vitamin A: 93IU | Vitamin C: 196mg | Calcium: 28mg | Iron: 18mg

இதனையும் படியுங்கள் : ஒரு முறை இறாலுடன் கத்தரிக்காய் சேர்த்து மணக்க மணக்க இப்படி குழம்பு வைத்து பாருங்கள் அவ்வளவு ருசியாக இருக்கும்!!