- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
இன்று சமைக்க பிடிக்கவில்லையா? தயிர் சாதம் தான் செய்யப் போகிறீர்களா? அந்த தயிர் சாதத்திற்கு ஊறுகாய் தொட்டுக்க ப்ளாக் பண்ணியிருந்திங்களா? அதற்கு பதிலாக சுவையான சைடு டிஷ் ஏதாவது செய்யலாம் அல்லவா? உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த வாழைக்காயைக் கொண்டு சுக்கா வறுவலை செய்யுங்கள். இந்த வாழைக்காய் சுக்கா வறுவல் தயிர் சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.
பொதுவாக வாழைக்காய் வைத்து பஜ்ஜி, கிரேவி போன்றவை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். இன்று நாம் வாழைக்காய் சுக்கா எப்படி செய்வதென்று தான் பார்க்க போகிறோம். இதனை குழந்தைகளும் சரி, பெரியவர்களும் சரி மிகவும் விரும்பி சாப்பிடும் விதத்தில் இதன் சுவை சூப்பராக இருக்கும். வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போதும் தங்களுக்கு வித்தியாசமான உணவுகளை சாப்பிட கேட்பார்கள். வாழைக்காய் வறுவல் செய்து கொடுத்தால் சாப்பிடும் குழந்தைகள், கிரேவி அல்லது குழம்பு வைத்து கொடுத்தால் சாப்பிடுவது இல்லை. அவர்களுக்கு வாழைக்காய் சுக்கா செய்து கொடுத்தால் சுவைத்து சாப்பிடுவார்கள்.
இதனை மாலை வேளையில் சூடாக ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றினால் கூட இதை செய்து சாப்பிடலாம். நாம் வழக்கமாக செய்து உண்ணும் மாலை நேர சிற்றுண்டிகளுக்கு இவை ஒரு அருமையான மாற்று. இதை நாம் குறைந்த பொருட்களை வைத்தே வெகு சுலபமாக எந்த ஒரு சிரமமும் இன்றி செய்து விடலாம். இவை செய்வதற்கும் அதிக நேரம் எடுக்காது. அது மட்டுமின்றி பள்ளியிலிருந்து வரும் நம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் இந்த வாழைக்காய் சுக்கா செய்து கொடுத்தால் அதை அவர்கள் கட்டாயம் மிகவும் விரும்பி உண்பார்கள்.
இதனையும் படியுங்கள் : சுவையான இறால் வாழைக்காய் குழம்பு ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் பின் இப்படித்தான் செய்வீர்கள்!!!
Ingredients
Method
முதலில் வாழைக்காயை தண்ணீரில் அலசி விட்டு, குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஒரு விசில் விட்டு வேகவைத்து கொள்ளவும்.
பின் வாழைக்காயை தோல் நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் சோம்பு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு காய்ந்ததும் சோம்பு, தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும். பின் வாழைக்காய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா தூள், மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் தேங்காய் விழுது சேர்த்து நன்கு கலந்து குறைந்த தீயில் வைத்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வாழைக்காய் சுக்கா தயார். இது சாம்பார் சாதம், ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.






