Home சைவம் மதிய உணவுக்கு ஏற்ற ருசியான வெஜ் பிரைடு ரைஸ் இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

மதிய உணவுக்கு ஏற்ற ருசியான வெஜ் பிரைடு ரைஸ் இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா. துரித உணவு வகையை சார்ந்த பிரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை. பிரைட் ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன.

-விளம்பரம்-

சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைட் ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைட் ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது. வெஜிடபிள் பிரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது. உண்மையில் இந்த வெஜ் பிரைட் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம்.

Print
5 from 2 votes

வெஜ் பிரைட் ரைஸ் | Veg Fried Rice Recipe In Tamil

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா. துரித உணவு வகையை சார்ந்த பிரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை. பிரைட் ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைட் ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைட் ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: dinner, LUNCH
Cuisine: Indian
Keyword: Veg Fried Rice
Yield: 4 People
Calories: 93kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 தவா

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1 குடைமிளகாய்
  • 2 கேரட்
  • 50 கி பீன்ஸ்
  • 1/4 கப் முட்டைகோஸ்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் வெங்காயத்தாள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் உப்பு

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு அலசி விட்டு சிறிது நேரம் ஊற வைத்து பின் குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்துக்கொள்ளவும்.
  • பின் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய் வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கறிகள் பாதி வெந்ததும் மிளகுத்தூள், சோயா சாஸ், உப்பு சேர்த்து கலந்து‌ இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
  • பின் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து இறுதியில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் பிரைட் ரைஸ் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 93kcal | Carbohydrates: 9g | Protein: 5.1g | Fat: 2.5g | Sodium: 2.24mg | Potassium: 187mg | Fiber: 2.7g | Vitamin A: 36IU | Vitamin C: 150mg | Calcium: 17.9mg | Iron: 5.8mg

இதனையும் படியுங்கள் : பிரெட் இருந்தால் போதும் சுலபமான மாலை நேர ஸ்நாக்ஸாக மொறு மொறு பிரெட் பகோடா நொடியில் தயார்!