Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற ருசியான வெஜ் பிரைடு ரைஸ் இப்படி ஈஸியாக வீட்டிலயே செஞ்சி பாருங்கள்!

Advertisement

பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா. துரித உணவு வகையை சார்ந்த பிரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை. பிரைட் ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன.

சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைட் ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைட் ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது. வெஜிடபிள் பிரைட் ரைஸ்கலோடு பன்னீர் பட்டர் மசாலா அல்லது கோபி மஞ்சூரியன் சேர்த்து உண்பது பெரும்பாலானோர் விரும்பும் காம்பினேஷன் ஆக உள்ளது. உண்மையில் இந்த வெஜ் பிரைட் ரைஸ் மிகவும் சுவையாக இருக்கும். வீட்டில் சமைப்பதும் மிகவும் எளிது. ஒருமுறை செய்து சாப்பிட்டால், மீண்டும் மீண்டும் சமைக்க வைக்கும். குழந்தைகளுக்கும் இது மிகவும் பிடிக்கும். எப்போது பார்த்தாலும் சாம்பார், ரசம், குழம்பு என்று வைத்து அலுத்துப் போன நேரத்தில் வாரத்தில் ஒரு நாள் இப்படி வெரைட்டி ரைஸ் செய்து சாப்பிடலாம்.

Advertisement

வெஜ் பிரைட் ரைஸ் | Veg Fried Rice Recipe In Tamil

Print Recipe
பிரைட் ரைஸ் பிரியர்கள் பிரியாணி பிரியர்களை விட அதிக அளவில் நம் நாட்டில் இருக்கின்றனர். பிரியாணிக்கு இணையான ஒரு டிஷ் என்றால் அது பிரைட் ரைஸ் மட்டும் தான். ஹோட்டலுக்கு சென்றாலே பாதிப்பேர் எனக்கு பிரைட் ரைஸ் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுகிறார்கள். அதை ஹோட்டலில் தான் சாப்பிட வேண்டுமா? இனி வீட்டிலேயே சுவையான பிரைட் ரைஸ் எப்படி செய்வதென்று பார்ப்போமா.
Advertisement
துரித உணவு வகையை சார்ந்த பிரைட் ரைஸ், சந்தேகத்திற்கு இடமின்றி இளம் வயதினரின் மிகவும் பிடித்தமான உணவு வகை. பிரைட் ரைசில் பல வகை உண்டு. அசைவ பிரியர்களுக்கு சிக்கன் மற்றும் எக் பிரைடு ரைஸ் மிகவும் பிடித்தமானவையாக இருக்கின்றன. சைவ பிரியர்களுக்கு மஸ்ரூம் மற்றும் பன்னீர் பிரைட் ரைஸ்களுக்கு அடுத்து வெஜிடபிள் பிரைட் ரைஸ் தான் டாப் சாய்ஸாக உள்ளது.
Course dinner, LUNCH
Cuisine Indian
Keyword Veg Fried Rice
Prep Time
Advertisement
10 minutes
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 4 People
Calories 93

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 தவா

Ingredients

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1 குடைமிளகாய்
  • 2 கேரட்
  • 50 கி பீன்ஸ்
  • 1/4 கப் முட்டைகோஸ்
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 கப் வெங்காயத்தாள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 2 டீஸ்பூன் சோயா சாஸ்
  • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் உப்பு

Instructions

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு அலசி விட்டு சிறிது நேரம் ஊற வைத்து பின் குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து உதிரியாக வேக வைத்துக்கொள்ளவும்.
  • பின் கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், குடைமிளகாய் வெங்காயம், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • காய்கறிகள் பாதி வெந்ததும் மிளகுத்தூள், சோயா சாஸ், உப்பு சேர்த்து கலந்து‌ இரண்டு நிமிடங்கள் வேக விடவும்.
  • பின் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து இறுதியில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான வெஜிடபிள் பிரைட் ரைஸ் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 93kcal | Carbohydrates: 9g | Protein: 5.1g | Fat: 2.5g | Sodium: 2.24mg | Potassium: 187mg | Fiber: 2.7g | Vitamin A: 36IU | Vitamin C: 150mg | Calcium: 17.9mg | Iron: 5.8mg

இதனையும் படியுங்கள் : பிரெட் இருந்தால் போதும் சுலபமான மாலை நேர ஸ்நாக்ஸாக மொறு மொறு பிரெட் பகோடா நொடியில் தயார்!

Advertisement
Prem Kumar

Recent Posts

இன்றைய ராசிபலன் – 12 மே 2024!

மேஷம் இன்று செய்யும் தர்மகாரியம் உங்களுக்கு மன அமைதி மற்றும் சவுகரியத்தைக் கொண்டு வரும். சக அலுவலர்களும் மற்றவர்களும் கவலை…

36 நிமிடங்கள் ago

வீடே மணக்க மணக்க ருசியான ஆலு மேத்தி கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!

இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்…

9 மணி நேரங்கள் ago

பிரட் இல்லாமலே பிரட் அல்வா செய்யலாம் எப்படி தெரியுமா ? இதோ இப்படி ட்ரை பண்ணி பாருங்க!

அல்வா என்றாலே அனைவரின் நாவிலும் நீர் சுரக்கத்தான் செய்யும். அப்படி இருக்க  ப்ரட் அல்வாவை அதன் வாசனையிலேயே மனம் நிறைய…

13 மணி நேரங்கள் ago

காலிஃப்ளவர் முட்டை ப்ரை எப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

எப்பவும் சாதத்துக்கு ஒரே மாதிரியான பொரியல் செஞ்சு சாப்பிட்டு போர் அடிச்சிடுச்சா அப்போ உங்களுக்கு தான் இந்த காலிஃப்ளவர் முட்டை…

13 மணி நேரங்கள் ago

டேஸ்டியான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் அவல் கட்லெட் 10 நிமிடத்தில் வீட்டிலேயே ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்!!

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி…

13 மணி நேரங்கள் ago

தீராத துன்பங்கள் அனைத்தும் தீர்ந்து போவதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டிய முறை

ராம நாமத்தை மனதார உச்சரித்து முழுமனதோடு ஆஞ்சநேயரே வேண்டுபவர்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை. ராமருடைய தீவிர பக்தரான ஆஞ்சநேயர் தைரியம்…

14 மணி நேரங்கள் ago