மதிய உணவுக்கு சுட சுட காய்கறி மிளகு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற

By Prem Kumar · 24/4/2024

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான காய்கறி மிளகு சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

காய்கறி மிளகு சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த காய்கறிகள் வைத்து சுவையான இந்த சாதத்தை செய்து விட முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மசாலா எதுவும் சேர்க்காமல் மிளகு காரம் மட்டும் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

மேலும் சிறிய குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி இதனை லஞ்சிற்கு செய்து கொடுத்து அனுப்பலாம். மஞ்சள், பச்சை, சிவப்பு நிற காய்கறிகளை பயன்படுத்தினால் இந்த ரெசிபி மேலும் சிறப்பாக இருக்கும். குடைமிளகாய், கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி கலர் புஃள்ளாக செய்து கொடுத்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

இதனையும் படியுங்கள் : ரெம்ப ஈஸியாக ருசியான புளி சாதம் செய்ய நினைத்தால் சூப்பரான புளி சாதம் இப்படி செஞ்சி பாருங்க!

Recipes AMP · Quick view
View full