ரெம்ப ஈஸியாக ருசியான புளி சாதம் செய்ய நினைத்தால் சூப்பரான புளி சாதம் இப்படி செஞ்சி பாருங்க!

- Advertisement -

பொதுவா ஒரு சிலருக்கு குழம்பு சாதம் பிடிக்கவே பிடிக்காது ஆனா வெரைட்டி சாதமான புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் புதினா சாதம் கொடுத்தா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த எல்லா சாதத்தையும் விட எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச சாதம் அப்படின்னா அது புளி சாதம் அப்படின்னே சொல்லலாம். கோவில்ல பிரசாதமா கிடைக்கிற புளி சாதத்துக்கு எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் பரவால்ல நம்ம வரிசையில நின்னு அதை வாங்கி சாப்பிடுவோம். அந்த அளவுக்கு ரொம்ப வெயிட் டேஸ்டான ஒரு சாதம் தான் புளி சாதம்.

-விளம்பரம்-

சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ஆனா நீங்க எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பெர்ஃபெக்ட்டான புளி சாதம் ட்ரை பண்ணாலும் வரமாட்டேங்குதா அப்போ இந்த மாதிரி ஒரு தடவை ரொம்ப சிம்பிளான புளி சாதம் செஞ்சு பாருங்க கண்டிப்பா உங்களுக்கு சாதம் சூப்பரா வரும். என்னை மிதக்க மிதக்க செய்யப் போற இந்த புலி கூட்டத்தில் சாதம் போட்டு பிரட்டி சாப்பிட்டா அவ்வளவு ருசியா இருக்கும் ஒரு தேங்காய் துவையல் மட்டும் அரைச்சு இது கூட வச்சு சாப்பிட்டோம் அப்படின்னா ஒரு சூப்பரான லஞ்ச் ஆக இருக்கும்.

- Advertisement -

உங்க குழந்தைகளுக்கும் வேலைக்கு போறவங்களுக்கும் டிபன் பாக்ஸ்ல இதை பேக் பண்ணி கொடுத்தா மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிச்சிட்டு தான் வருவாங்க. இந்த சூப்பரான அருமையான ரொம்பவே டேஸ்டா இருக்கக்கூடிய சிம்பிளான புளி சாதம் எப்படி செய்வது என்று வாங்க பார்க்கலாம்.

Print
No ratings yet

புளி சாதம் | Tamarind Rice Recipe In Tamil

பொதுவா ஒரு சிலருக்கு குழம்பு சாதம் பிடிக்கவே பிடிக்காது ஆனா வெரைட்டி சாதமான புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம் புதினா சாதம் கொடுத்தா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இந்த எல்லா சாதத்தையும் விட எல்லாருக்கும் ரொம்ப புடிச்ச சாதம் அப்படின்னா அது புளி சாதம் அப்படின்னே சொல்லலாம். கோவில்ல பிரசாதமா கிடைக்கிற புளி சாதத்துக்கு எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் பரவால்ல நம்ம வரிசையில நின்னு அதை வாங்கி சாப்பிடுவோம். உங்க குழந்தைகளுக்கும் வேலைக்கு போறவங்களுக்கும் டிபன் பாக்ஸ்ல இதை பேக் பண்ணி கொடுத்தா மிச்சம் வைக்காம சாப்பிட்டு முடிச்சிட்டு தான் வருவாங்க. இந்த சூப்பரான அருமையான ரொம்பவே டேஸ்டா இருக்கக்கூடிய
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Tamarind Rice
Yield: 4
Calories: 206kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • புளி பெரிய எலுமிச்சை பழ அளவு
  • 1 டீஸ்பூன் மல்லிவிதைகள்
  • 1 டீஸ்பூன் வெந்தயம்
  • 5 காய்ந்தமிளகாய்
  • 2 கப் வடித்த சாதம்
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 டீஸ்பூன் கடலைபருப்பு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள்தூள்
  • 1 டீஸ்பூன் வேர்க்கடலை
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சுடு தண்ணீரில் புளியை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும் ஊற வைத்த புளியை நன்கு கரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் மல்லி விதைகள் வெந்தயம் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைத்து மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை கடலைப்பருப்பு வேர்க்கடலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து மஞ்சள் தூள் உப்பு அரைத்து வைத்துள்ள பொடி அனைத்தையும் சேர்த்து 15 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான புளி கூட்டு தயார்.
  • இதனுடன் சாதத்தை போட்டு கிளறி எடுத்தால் சுவையான புளி சாதம் தயார்.

Nutrition

Serving: 100g | Calories: 206kcal | Carbohydrates: 67g | Protein: 33g | Sodium: 78mg | Potassium: 321mg

இதையும் படியுங்கள் : இனி பீர்க்கங்காய் வாங்கினால் மிஸ் பண்ணாம அவசியம் இப்படி குழம்பு செய்து பாருங்கள்!