Home சைவம் மதிய உணவுக்கு சுட சுட காய்கறி மிளகு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன்...

மதிய உணவுக்கு சுட சுட காய்கறி மிளகு சாதம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் சுவையே தனி!

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான காய்கறி மிளகு சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

காய்கறி மிளகு சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். ஒவ்வொருவரும் சமைப்பதற்கு நேரம் குறைவாக இருக்கின்ற நேரத்தில் காய்கறிகளை வைத்தோ அல்லது தக்காளி, வெங்காயம் வைத்து வெரைட்டி சாதம் செய்து விடலாம் என்று தான் யோசித்து முடிவு எடுப்பார்கள். அவ்வாறு குழம்பு வைக்க நேரம் இல்லாத போது இந்த காய்கறிகள் வைத்து சுவையான இந்த சாதத்தை செய்து விட முடியும். இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மசாலா எதுவும் சேர்க்காமல் மிளகு காரம் மட்டும் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

மேலும் சிறிய குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி இதனை லஞ்சிற்கு செய்து கொடுத்து அனுப்பலாம். மஞ்சள், பச்சை, சிவப்பு நிற காய்கறிகளை பயன்படுத்தினால் இந்த ரெசிபி மேலும் சிறப்பாக இருக்கும். குடைமிளகாய், கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி கலர் புஃள்ளாக செய்து கொடுத்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.

Print
2.50 from 2 votes

காய்கறி மிளகு சாதம் | Vegetable Pepper Rice Recipe In Tamil

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற்று வித்தியாசமாக அவர்களுக்கு ஏதேனும் செய்து கொடுக்கலாம். அந்த வவையில் சுவையான காய்கறி மிளகு சாதம்‌ எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம். காய்கறி மிளகு சாதம் ஒரு எளிதான, விரைவான மற்றும் சுவையான மதிய உணவுப்பெட்டி செய்முறையாகும், இது அரிசியை ஊறவைத்தால் வெறும் 20 நிமிடங்களில் செய்யலாம். குடைமிளகாய், கேரட் போன்ற காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகக்கு இந்த மாதிரி கலர் புஃள்ளாக செய்து கொடுத்தால் சத்தம் மில்லாமல் அனைத்தையும் சாப்பிட்டு முடிப்பார்கள்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Vegetable Pepper Rice
Yield: 3 People
Calories: 93kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாசுமதி அரிசி
  • 1 கேரட்
  • 1 குடைமிளகாய்
  • 50 கி பீன்ஸ்
  • 1/4 கப் முட்டைக்கோஸ்
  • வெங்காயத்தாள் சிறிதளவு
  • 2 டீஸ்பூன் மிளகு தூள்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு
  • 2 பெரிய வெங்காயம்

செய்முறை

  • முதலில் பாசுமதி அரிசியை நன்கு அலசி வேக வைத்து விட்டு, பின் குக்கரில் சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், முட்டைகோஸ், வெங்காயத்தாள் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்கவும்.
  • பின் மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து, உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • காய்கறிகள் நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் மிகவும் சுவையான, சத்தான காய்கறி மிளகு சாதம் தயார்.‌

Nutrition

Serving: 400g | Calories: 93kcal | Carbohydrates: 6.9g | Protein: 5.1g | Fat: 2.5g | Sodium: 24mg | Potassium: 187mg | Fiber: 2.75g | Vitamin A: 30IU | Vitamin C: 150mg | Calcium: 17mg | Iron: 9.5mg

இதனையும் படியுங்கள் : ரெம்ப ஈஸியாக ருசியான புளி சாதம் செய்ய நினைத்தால் சூப்பரான புளி சாதம் இப்படி செஞ்சி பாருங்க!