சுவையான சத்துமிக்க வெஜிடபிள் பிட்சா வீட்டில் எளிமையாக செய்வது எப்படி?

- Advertisement -

இட்லி மாவு , தோசை மாவு இல்லாத சமயங்களில் இல்லை ஒரே மாதிரியான டிபன்  செய்து கொடுத்து போரடிக்கிற  போது இந்த மாதிரி வெஜிடபிள் பீசா செய்து அசத்தலாம். புதுசா   ஹெல்தியா பீட்சா  சாப்பிடலாம். பீட்சா சுமார் ஒரு ஆறு ஏழு வருடங்களுக்கு முன்பு வரை  பீட்சா என்பது அனைவருக்கும் கடைக்காத ஒன்றாக இருந்தது. ஆனால் இப்போது யாரை கேட்டாலூம் டிரீட் வைக்க  பீட்சா வேண்டும் என்ற மைக்செட்டுக்கு நம்ம எல்லாரும் வந்துட்டோம். அப்படிப்பட்ட பீட்சாவை பிசா பேஸ் இல்லாம எப்படி வீட்டிலேயே சுவையா வெஜிடபிள்ஸ் வச்சு செய்யலாம்னு பாக்க போறோம்.

-விளம்பரம்-

பீசா குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் நிறைய விளம்பரங்களில் அந்த சீஸ் பீட்சாவை பிரித்து அந்த பிசாவை சாப்பிடுற மாதிரியான விளம்பரம் பார்த்து  குழந்தைகளுக்கு எல்லாம் பீட்சா ரொம்ப பிடிக்கும். அந்த மாதிரி சீஸியான பீட்ஸா மேல ரொம்ப விருப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள் . சோ மாதிரி இருக்குற குழந்தைகளுக்கு நம்ம வெஜிடபிள்ஸ்  வச்சி சத்தா செய்து கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும்.

- Advertisement -

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே  காய்கறிகளில் விதவிதமான உணவுகள் செய்து கொடுக்கிறது ரொம்பவே நல்லது . குழந்தைகளுக்கு அதிகமான சத்துக்கள் கிடைக்க இந்த காய்கறிகள் ரொம்ப உதவியா இருக்கும். இந்த வெஜிடபிள் பீட்சால வெறும் காய்கறிகள் மட்டுமல்லாமல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் காளான் பன்னீர் எல்லாமே நீங்க  சேர்த்து இந்த வெஜிடபிள் பீட்சாவ செய்து சாப்பிடலாம். இல்லை குழந்தைகளுக்கு சீஸியான பிட்சா தான் பிடிக்கும் அப்படின்னா நம்ம இந்த பீசா ரெடி பண்ணிட்டு அது மேல சீஸ் வச்சு சூடு பண்ணி கொடுக்கலாம். குழந்தைகளை எப்படி சாப்பிட வைக்கனும்  அவங்களுக்கு விருப்பமில்லாத பிடிக்காத உணவுகளை கூட பிடித்த மாதிரி கொடுக்கணும் . எதாவது வித்தியாசமா  பண்ணா தான் இந்த காலத்து குழந்தைகளை சத்தான உணவுகளை உண்ண வைக்க முடியும். அதனால நம்ம வெஜிடபிள்ஸ் வெரைட்டி வெரைட்டியா செஞ்சு கொடுக்கும்போது அது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். சரி வாங்க இப்ப நம்ம அந்த வெஜிடபிள் சீஸி பீட்சா எப்படி செய்யறது

Print
4 from 2 votes

வெஜிடபிள் பிட்சா | Vegetable Pizza Recipe In Tamil

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே  காய்கறிகளில்விதவிதமான உணவுகள் செய்து கொடுக்கிறது ரொம்பவே நல்லது . குழந்தைகளுக்கு அதிகமான சத்துக்கள் கிடைக்க இந்த காய்கறிகள் ரொம்ப உதவியா இருக்கும். இந்த வெஜிடபிள் பீட்சால வெறும் காய்கறிகள் மட்டுமல்லாமல் உங்களுக்கு விருப்பம் இருந்தால் காளான் பன்னீர் எல்லாமே நீங்க  சேர்த்துஇந்த வெஜிடபிள் பீட்சாவ செய்து சாப்பிடலாம். இல்லை குழந்தைகளுக்கு சீஸியான பிட்சா தான் பிடிக்கும் அப்படின்னா நம்ம இந்த பீசா ரெடி பண்ணிட்டு அது மேல சீஸ் வச்சு சூடு பண்ணி கொடுக்கலாம். குழந்தைகளை எப்படி சாப்பிட வைக்கனும்  அவங்களுக்குவிருப்பமில்லாத பிடிக்காத உணவுகளை கூட பிடித்த மாதிரி கொடுக்கணும் . எதாவது வித்தியாசமா  பண்ணாதான் இந்த காலத்து குழந்தைகளை சத்தான உணவுகளை உண்ண வைக்க முடியும். அதனால நம்ம வெஜிடபிள்ஸ் வெரைட்டி வெரைட்டியா செஞ்சு கொடுக்கும்போது அது குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். சரி வாங்க இப்ப நம்ம அந்த வெஜிடபிள் சீஸி பீட்சா எப்படி செய்யறது
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Snack
Cuisine: italy
Keyword: Vegetable Pizza
Yield: 4
Calories: 339kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் கோதுமை மாவு
  • 1 கப் கடலை மாவு
  • 1 கப் துருவிய உருளைகிழங்கு
  • 1 கப் துருவிய கேரட்
  • 1 கப் பொடியாக நறுக்கிய பீன்ஸ்
  • 1/2 கப் பொடியாக நறுக்கிய குடைமிளகாய்
  • 1 வெங்காயம்
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கப் துருவிய சீஸ்
  • உப்பு தேவையானஅளவு

தாளிக்க

  • எண்ணெய்  தேவையானஅளவு
  • 1/4 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் சீரகம்
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி தேவையானஅளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு , சீரகம், கறுவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ளவும் .
  • பிறகு அதில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பீன்ஸ் , பொடியாக நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் .அதில் காரத்திற்கு ஏற்ப மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இரண்டு உருளைக்கிழங்குகளை  நன்றாகதுருவி நீரில் போட்டு வைக்க வேண்டும்.
  • பிறகு அந்த நீரை பிழிந்து விட்டு வெறும் உருளைக்கிழங்கு துருவலை ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். அதில் கடலை மாவு, கோதுமை மாவு அதற்கு தேவையான உப்பு சேர்த்து பிறகு ரெடி செய்து வைத்துள்ள வெஜிடபிள் மசாலாவை அந்த மாவில் சேர்த்து கொள்ளவும்.
  •  சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி அடை சுடும் அளவு பதத்திற்கு மாவை கலந்து விட்டுக் கொள்ள வேண்டும். அதிகமாக நீர் சேர்க்க கூடாது இதில் கலவையில் கொத்தமல்லி தழையை சேர்த்து நன்றாக கிளறி கொள்ள வேண்டும்.
  • பிறகு அடுப்பில் ஒரு தவாவை  வைத்துஅதில் எண்ணெய் ஊற்றி தாவா முழுவதும் எண்ணெய் படும் படி தேய்த்துகொள்ளவேண்டும்.  ரெடிசெய்து வைத்துள்ள பீட்சா மாவை அதில் ஊற்றி சமமாக தடவி விட வேண்டும்.வட்ட வடிவில் சமமாக தடவி மேலே எண்ணெய் ஊற்றி மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
  • ஒரு ஐந்து நிமிடம் வெந்த பிறகு பீட்சா போல் கட் செய்து கொள்ள வேண்டும். பிறகு அவைகளை ஒவ்வொன்றாக திருப்பிப் போட்டு நன்றாக வெந்தவுடன். 
  • அதன் மேல்  சீஸைதூவி 5 நிமிடம் மூடி வைத்து சீஸ் உருகியதும் ஒரு பாத்திரத்திற்கு மாற்றினால் சூடான சத்தான சீஸி வெஜிடபிள் பீட்சா தயார் தக்காளி சாஸ் வைத்து  பரிமாறவும்.

Nutrition

Serving: 500g | Calories: 339kcal | Carbohydrates: 72.6g | Protein: 13.7g | Fat: 1.9g | Saturated Fat: 0.3g | Potassium: 405mg | Fiber: 12.2g | Iron: 3.9mg