அசத்தலான ருசியில் வெண்டை கத்தரி புளிக்கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!!

- Advertisement -

அனைவருக்கும் பிடித்த வெண்டைக்காய் குழம்பு, கத்தரி குழம்பை விட்டு ஒரு முறை இப்படி வெண்டை கத்தரி புளிக்கறி செய்து பாருங்கள். சுட சுட சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடும்பொழுது நாவில் எச்சில் ஊறும் சுவையில் அருமையாக இருக்கும்கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், பாகற்காய் இவ்வாறு காய் வகைகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கு இவற்றில் சிலவற்றை மட்டும் தான் சாப்பிட பிடிக்கும். அதிலும் ஒரு சில குழந்தைகள் காய்கறி பொரியல் என்று சொன்னாலே தொட கூட மாட்டார்கள்.

-விளம்பரம்-

இவ்வாறு பெரும்பாலானோர் ஒதுக்கி வைக்கும் காய்கறிகளில் ஒன்று கத்தரிக்காய். இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்து இருக்கின்றது. இதனை உணவில் சேர்த்துச் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மையை அளிக்கிறது. இந்த கத்தரிக்காயை குழந்தைகளும் சாப்பிடும் வகையில் வெண்டைக்காய் சேர்த்து எவ்வாறு சுவையாக சமைத்து கொடுக்கலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

வெண்டை கத்தரி புளிக்கறி ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான வெண்டை கத்தரி புளிக்கறிக்கு அடிமையாகி போனவர்களும் உண்டு.  இப்படிப்பட்ட வெண்டை கத்தரி புளிக்கறி எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட ஒவ்வொரு வகையான குழம்புகள் செய்யப்படுகிறது. அதிலும் சுடச்சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும் ஒருசில குழம்புகள் அனைவருக்கும் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.  வெண்டைக்காய் கத்திரிக்காய் சேர்த்து செய்யும் இந்த சுவையான வெண்டை கத்தரி புளிக்கறி நீங்களும் இப்படி ட்ரை செய்து பாருங்கள். பிறகு மீண்டும் அடிக்கடி உங்கள் வீட்டில் வெண்டை கத்தரி புளிக்கறி இருக்கும். வாருங்கள் இதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Print
No ratings yet

வெண்டை கத்தரி புளிக்கறி | Vendai Katthri Puli curry Recipe in Tamil

வெண்டைக்காய் கத்தரி குழம்பை விட்டு ஒரு முறை இப்படி வெண்டை கத்தரி புளிக்கறி செய்து பாருங்கள்.சுட சுட சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிடும்பொழுது நாவில் எச்சில் ஊறும் சுவையில்அருமையாக இருக்கும்கத்தரிக்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், பாகற்காய்இவ்வாறு காய் வகைகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் குழந்தைகளுக்கு இவற்றில் சிலவற்றைமட்டும் தான் சாப்பிட பிடிக்கும். அதிலும் ஒரு சில குழந்தைகள் காய்கறி பொரியல் என்றுசொன்னாலே தொட கூட மாட்டார்கள்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: Vendai Katthri Puli curry
Yield: 4
Calories: 192kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 100 கிராம் கத்தரிக்காய்
  • 100 கிராம் வெண்டைக்காய்
  • 2 தேக்கரண்டி மிளகாய்த் தூள்
  • 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • கறிவேப்பிலை தாளிக்க
  • 2 தேக்கரண்டி தனியாத் தூள்
  • 1/2 தேக்கரண்டி சீரகம்
  • 2 மேசைக்கரண்டி எண்ணெய்
  • 1/2 தேக்கரண்டி கடுகு
  • உப்பு தேவையானஅளவு
  • 1 வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 புளி நெல்லிக்காய்அளவு
  • 3 தக்காளி
  • வெந்தயம் சிறிதளவு

செய்முறை

  • முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கத்தரிக்காயை சிறுத் துண்டுகளாக நறுக்கி வைக்கவும். புளியை சூடான தண்ணீரில் ஊற வைக்கவும்
  • வெண்டைக்காயை அரை இஞ்ச் நீளத் துண்டுகளாக நறுக்கி பசை தன்மை போக வதக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், வெந்தயம், தாளிக்கவும்
  • அதில் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • அதன் பின்னர் கத்தரிக்காய் மற்றும் எல்லா தூள் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும். பிறகு ஊற வைத்த புளியைகரைத்து ஊற்றி எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும்
  • கலவை கொதித்ததும் வெண்டைக்காய், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்திருக்கவும். நீர் வற்றி குழம்பு சுண்டியதும் இறக்கவும். சுவையான வெண்டை கத்தரி புளிக்கறி ரெடி

Nutrition

Serving: 200g | Calories: 192kcal | Carbohydrates: 18g | Protein: 19g | Cholesterol: 3mg | Potassium: 378mg | Iron: 3mg