ருசியான வெண்டைக்காய் துவையல் இப்படி ஒரு தரம் செய்து பாருங்கள்! இதன் ருசியே தனி தான்!!
சூடான சாதத்துடன் துவையல் இருந்தால் நமக்கு ஒரு குண்டான் சாதம் இருந்தால் கூட பத்தாது. பொதுவாக துவையலை சுடுகஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் துவையலைத் தான். எனவே அதற்கு சற்று வித்தியாசமாக இந்த
சூடான சாதத்துடன் துவையல் இருந்தால் நமக்கு ஒரு குண்டான் சாதம் இருந்தால் கூட பத்தாது. பொதுவாக துவையலை சுடுகஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் துவையலைத் தான். எனவே அதற்கு சற்று வித்தியாசமாக இந்த வெண்டைக்காய் துவையல் செய்வது பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : சுடான ரச சோறுடன் தொட்டுக்க ருசியான வாழைப்பூ துவையல் இப்படி செய்து பாருங்க!
இது செய்வது மிகவும் சுலபம். சிலருக்கு வெண்டைக்காய் துவையல் சரியாக செய்யத் தெரியாது. அவர்களுக்கான ரெசிபி தான் இது. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள், திரும்பத் திரும்ப செய்யும் அளவிற்கு ஆர்வம் உண்டாகும். கடலைப்பருப்பு எல்லாம் சேர்த்து செய்யப்படும் இந்த சுவையான துவையல் பாரம்பரியமான முறையில் செய்யப்படுகிறது. இந்த துவையலில் சிறிது நல்ல எண்ணெய் சேர்த்து சுட சுட சாதத்துடன் அப்பளம் வைத்து சாப்பிட்டால், இதன் சுவைத் தனி அலாதி.