சூடான சாதத்துடன் துவையல் இருந்தால் நமக்கு ஒரு குண்டான் சாதம் இருந்தால் கூட பத்தாது. பொதுவாக துவையலை சுடுகஞ்சி, ரசம் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடுவோம். துவையலில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் துவையலைத் தான். எனவே அதற்கு சற்று வித்தியாசமாக இந்த வெண்டைக்காய் துவையல் செய்வது பாருங்கள்.
இதனையும் படியுங்கள் : சுடான ரச சோறுடன் தொட்டுக்க ருசியான வாழைப்பூ துவையல் இப்படி செய்து பாருங்க!
இது செய்வது மிகவும் சுலபம். சிலருக்கு வெண்டைக்காய் துவையல் சரியாக செய்யத் தெரியாது. அவர்களுக்கான ரெசிபி தான் இது. இப்படி ஒரு முறை செய்து பாருங்கள், திரும்பத் திரும்ப செய்யும் அளவிற்கு ஆர்வம் உண்டாகும். கடலைப்பருப்பு எல்லாம் சேர்த்து செய்யப்படும் இந்த சுவையான துவையல் பாரம்பரியமான முறையில் செய்யப்படுகிறது. இந்த துவையலில் சிறிது நல்ல எண்ணெய் சேர்த்து சுட சுட சாதத்துடன் அப்பளம் வைத்து சாப்பிட்டால், இதன் சுவைத் தனி அலாதி.
வெண்டைக்காய் துவையல் | Vendakkai Thuvaiyal Recipe in Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 கரண்டி
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/4 கிலோ வெண்டைக்காய்
- 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 டேபிள் ஸ்பூன் கடலை
- 1 டேபிள் ஸ்பூன் ளஉளுந்த பருப்பு
- 4 வர மிளகாய்
- 4 பல் பூண்டு
- 2 துண்டு புளி
- 5 சின்ன
- 1/4 கப் தக்காளி
தாளிக்க
- 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு உளுந்தம் பருப்பு
- 2 வர மிளகாய்
செய்முறை
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும்.
- பின் அதில் வெங்காயம், பூண்டு, தக்காளி, புளி சேர்த்து நன்கு மசித்து வதக்கிக் கொள்ளவும்.
- வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் வர மிளகாய் சேர்த்து வதக்கி அதனை தனி பவுளில் எடுத்து வைத்து கொள்ளவும்.
- பின்னர் அதே கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வழுவழுப்பு போகும் வரை வதக்கவும்.
- வெண்டைக்காய் வதங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு அதனை ஆற விடவும்.
- பின் ஒரு மிக்ஸியில் வதக்கிய வெண்டைக்காய் மற்றும் வெங்காய கலவையை சேர்த்து நன்கு மையாக அரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, மற்றும் வர மிளகாய் சேர்த்து தாளித்து அரைத்த கலவையில் சேர்க்கவும்.
- அவ்வளவுதான் வெண்டைக்காய் துவையல் தயார். இதனை சாதம், இட்லி மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.