- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, LUNCH
சுட சுட சாதத்துடன் வாழைப்பூ துவையல் இது போன்று ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்க மீண்டும் மீண்டும் சுவைக்க தோன்றும். அதுமட்டும் அல்லாமல் இந்த வாழைப்பூ உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இப்படி செய்து கொடுத்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Ingredients
Method
முதலில் வாழைப்பூவை நன்கு கழுவி நடுவில் உள்ள காம்பு பகுதியை நீக்கி சுத்தம் செய்த பின் பொடியாக நறுக்கி மோர் கலந்து நீரில் போட்டு வைக்கவும்.
அடுத்து வாணலில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, மிளகாய் வற்றல் மூன்றாம் போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும்.
பின் அதே வாணலில் வாழைப்பூவை போட்டு நன்றாக வதக்கி விட்டு லேசாக தண்ணீர் தெளித்து கிளறி நன்கு சுருளும் வரை வதக்கி அதோடு தேங்காய் துருவலையும் போட்டு வதக்கி எடுக்கவும்.
வதக்கிய வாழைப்பூவுடன் வறுத்த கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, தேங்காய் துருவல், மற்றும் புளி, உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த விழுதில் சேர்த்து கலந்து பரிமாறவும்.






