ஆரோக்கியமான ஆட்டு நுரையீரல் வறுவல் கிராமத்து ஸ்டைல்லில் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்!!

வார விடுமுறை நாட்களில் தான் நம்மால் வீட்டில் வாய்க்கு ருசியாக சமைத்து, அதை பொறுமையாக சுவைத்து சாப்பிட முடியும். அதுவும் இந்த வாரம் நீங்கள் வித்தியாசமான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆட்டு நுரையீரல் வாங்கி வறுவல் செய்து சாப்பிடுங்கள். இந்த ஆட்டு நுரையீர

By Prem Kumar · 4/7/2025

வார விடுமுறை நாட்களில் தான் நம்மால் வீட்டில் வாய்க்கு ருசியாக சமைத்து, அதை பொறுமையாக சுவைத்து சாப்பிட முடியும். அதுவும் இந்த வாரம் நீங்கள் வித்தியாசமான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆட்டு நுரையீரல் வாங்கி வறுவல் செய்து சாப்பிடுங்கள். இந்த ஆட்டு நுரையீரல் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த வறுவல் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.

பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. ஆட்டு கறி விட ஆட்டுக்கறியில் இருக்கிற உறுப்புகள் தான் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. இன்றைய உலகில் இறைச்சியின் பாகங்களை சாப்பிடுவதை நாகரிகம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனால் ஆட்டின் நுரையீரல் மிகவும் ஆரோக்கியம் மிகுந்தது.

நுரையீரல் சாப்பிடுவதில் நன்மை இருக்கிறது. உடலுக்கு வலிமை தரும். ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதல் உடலின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படுகிறது. நமது நுரையீரலுக்கும் வலுவை தருவதுடன் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு பயனை அளிக்கும். அதனால இந்த மாதிரி சுவாச பிரச்சனைகள் இருக்குறவங்க வாரத்துக்கு ஒரு தடவை நுரையீரலை உணவில் சேர்த்துக்கோங்க. அப்படி சேர்த்து கொண்டால் கண்டிப்பா இந்த பிரச்சனைகள் எல்லாமே குணமாகும்.

பொதுவா நமக்கு ஏதாவது ஒரு உடல் நல கோளாறுகள் இருந்தால் அதை உணவு மூலமாக தான் சரி செய்யணும் அந்த வகையில இந்த சுவாச கோளாறுகள் பிரச்சனைகளை சரி செய்ய நுரையீரல் வறுவல் செய்து சாப்பிடுங்க. இதை சின்ன குழந்தைகளிலிருந்து உங்க வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்க அப்பதான் எல்லாமே சாப்பிட்டு பழகுவாங்க. இப்ப வாங்க கிராமத்து ஸ்டைல்லில் சுவையான நுரையீரல் வறுவல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

இதனையும் படியுங்கள் : காரசாரமான ஈரல் ப்ரை இப்படி செய்து பாருங்க!

Recipes AMP · Quick view
View full