வார விடுமுறை நாட்களில் தான் நம்மால் வீட்டில் வாய்க்கு ருசியாக சமைத்து, அதை பொறுமையாக சுவைத்து சாப்பிட முடியும். அதுவும் இந்த வாரம் நீங்கள் வித்தியாசமான ஒரு ரெசிபியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆட்டு நுரையீரல் வாங்கி வறுவல் செய்து சாப்பிடுங்கள். இந்த ஆட்டு நுரையீரல் வறுவல் சாதத்துடன் மட்டுமின்றி, இட்லி, தோசையுடன் சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த வறுவல் செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
பொதுவாகவே அசைவ உணவு என்றால் மிகவும் எளிமையாக கிடைப்பது கோழிக்கறி தான். ஆனால் கோழிக்கறியை விட சற்று விலை அதிகமாக இருந்தாலும் ஆட்டுக்கறியை உணவில் சேர்த்துக் கொள்வது என்பது உடலுக்கு நன்மையை அளிக்கிறது. ஆட்டு கறி விட ஆட்டுக்கறியில் இருக்கிற உறுப்புகள் தான் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. இன்றைய உலகில் இறைச்சியின் பாகங்களை சாப்பிடுவதை நாகரிகம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனால் ஆட்டின் நுரையீரல் மிகவும் ஆரோக்கியம் மிகுந்தது.
நுரையீரல் சாப்பிடுவதில் நன்மை இருக்கிறது. உடலுக்கு வலிமை தரும். ஆட்டு நுரையீரல் சாப்பிடுவதல் உடலின் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்படுகிறது. நமது நுரையீரலுக்கும் வலுவை தருவதுடன் மூச்சுத் திணறல், ஆஸ்துமா போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு பயனை அளிக்கும். அதனால இந்த மாதிரி சுவாச பிரச்சனைகள் இருக்குறவங்க வாரத்துக்கு ஒரு தடவை நுரையீரலை உணவில் சேர்த்துக்கோங்க. அப்படி சேர்த்து கொண்டால் கண்டிப்பா இந்த பிரச்சனைகள் எல்லாமே குணமாகும்.
பொதுவா நமக்கு ஏதாவது ஒரு உடல் நல கோளாறுகள் இருந்தால் அதை உணவு மூலமாக தான் சரி செய்யணும் அந்த வகையில இந்த சுவாச கோளாறுகள் பிரச்சனைகளை சரி செய்ய நுரையீரல் வறுவல் செய்து சாப்பிடுங்க. இதை சின்ன குழந்தைகளிலிருந்து உங்க வீட்ல இருக்கிற குழந்தைகளுக்கு கொடுத்து பழகுங்க அப்பதான் எல்லாமே சாப்பிட்டு பழகுவாங்க. இப்ப வாங்க கிராமத்து ஸ்டைல்லில் சுவையான நுரையீரல் வறுவல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
கிராமத்து நுரையீரல் வறுவல் | Village Style Lungs Fry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மண் சட்டி
தேவையான பொருட்கள்
- 1 நுரையீரல்
- 1 டீஸ்பூன் சோம்பு
- 5 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
- 1/4 கி சின்ன வெங்காயம்
- 3 தக்காளி
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
அரைக்க
- 2 பட்டை
- 8 கிராம்பு
- 1 டீஸ்பூன் கசகசா
- 50 கி மல்லி
- 8 வர மிளகாய்
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 1/2 டீஸ்பூன் சீரகம்
- 2 துண்டு இஞ்சி
- 10 பல் பூண்டு
செய்முறை
- முதலில் நுரையீரலை நன்கு சுத்தம் செய்து விட்டு, துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு மண் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பின் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் நறுக்கிய நுரையீரல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன்பிறகு நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் விட்டு மூடி வைத்து 20 நிமிடங்கள் வரை வேக விடவும்.
- நுரையீரல் நன்கு வதங்கியதும் சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான கிராமத்து ஸ்டைலில் நுரையீரல் வறுவல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : காரசாரமான ஈரல் ப்ரை இப்படி செய்து பாருங்க!