- Advertisement -
அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஈரல் ப்ரை, இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சைடு டிஷாக சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஈரல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, இதை சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கர்ப கலைகளில் ரத்த அணுக்களை அதிகரிக்கும்.
-விளம்பரம்-
இந்த ரெசிபி செய்வதும் ஈஸி, குறைவான நேரத்திலும், சுலபமாகவும், சுவையாகவும் செய்து விடலாம்.
- Advertisement -
ஈரல் ப்ரை | Liver Fry Recipe In Tamil
அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஈரல் ப்ரை, இப்படி ஒரு முறை செய்து சாப்பிடுங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும். சாதத்துடன் சைடு டிஷாக சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். அதுமட்டும் அல்லாமல் ஈரல் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, இதை சாப்பிடுவதால் உடலுக்கு சத்துக்கள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்கள் ஆட்டு ஈரல் சாப்பிடுவதால் கர்ப கலைகளில் ரத்த அணுக்களை அதிகரிக்கும்.இந்த ரெசிபி செய்வதும் ஈஸி, குறைவான நேரத்திலும், சுலபமாகவும், சுவையாகவும் செய்து விடலாம்.
Yield: 4 people
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- ¼ கிலோ ஈரல்
- 2 வெங்காயம்
- 2 ஸ்பூன் மிளகுத்தூள்
- 1 ஸ்பூன் சீரகத்தூள்
- ½ ஸ்பூன் மஞ்சள் தூள்
- கறிவேப்பிலை சிறிதளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
செய்முறை:
- முதலில் ஈரலை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வெங்காயத்தையும் நறுக்கிக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- இதனுடன் ஈரல், மிளகுத்தூள், சீரகம், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி சிறுதளவு தண்ணீர் தெளித்து அடுப்பை சிமில் வைத்து கடாயை மூடி விடவேண்டும்.
- சிறிது நேரம் கழித்து ஈரல் வெந்ததும் கிளறி இறக்கவும்.
- இப்பொழுது காரசாரமான ஈரல் தயார்.