ருசியான கிராமத்து பிரண்டை ஊறுகாய் இப்படி செஞ்சி பாருங்க! மாங்காய் ஊறுகாய் போல சாப்பிட ருசியாக இருக்கும்!

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. தென்னிந்திய உணவில் ஊறுகாய்க்கு எப்போதுமே இடம் உண்டு. நம் வீட்ட

By Prem Kumar · 11/5/2024

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. தென்னிந்திய உணவில் ஊறுகாய்க்கு எப்போதுமே இடம் உண்டு. நம் வீட்டில் இருக்கும் பாட்டிமார்கள் குளிர்காலத்தில் தான் ஊறுகாய் போடும் மாங்காய், எலுமிச்சை பழங்களை காய வைப்பார்கள். அப்போது தான் அது சரியான பதத்தில் பழுத்து வரும். நம் வீடுகளில் அனைத்து உணவுகளுடனும் ஊறுகாய் பரிமாறப்படுகிறது.

உணவின் சுவை எப்படி இருந்தாலும் சரி, அதனுடன் ஊறுகாய் இருந்தால் போதும். சுவை பன்மடங்கு அதிகமாகி விடும். மாங்காய், எலுமிச்சை முதல் சிவப்பு மற்றும் பச்சை மிளகாய், கேரட், பூண்டு, மீன் மற்றும் கோழி என கிட்டத்தட்ட எல்லாவற்றையும் ஊறுகாய் செய்கிறோம். நீங்கள் இதுவரை எத்தனையோ வகையான ஊறுகாயை சுவைத்திருப்பீர்கள். ஆனால் பிரண்டையில் ஊறுகாய் செய்து சாப்பிட்டதுண்டா? இல்லையென்றால் இன்று அந்த ஊறுகாயை செய்து பாருங்கள்.

அதுவும் இந்த பிரண்டை ஊறுகாய் சாதம், சப்பாத்தி, தோசை போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இதை செய்து பக்குவமாக வைத்துக் கொண்டால் 6 மாதம் வரை வைத்து ருசிக்கலாம். கடைகளில் வாங்கும் ஊறுகாய்களில் பிரிசர்வேட்டிவ்கள் சேர்க்கப்பட்டிருக்கும். இதற்கு பதிலாக சுகாதாரமான முறையில் நாமே வீட்டில் செய்தால் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும்.

இதனையும் படியுங்கள் : ருசியான பிரண்டை கடையல் செய்வது எப்படி? மூட்டு வலிக்கு சிறந்த மருந்து இது!!!

Recipes AMP · Quick view
View full