பொதுவாக மீன் வகைகளை குழம்பு வைக்கலாம், வறுக்கலாம், பொரிக்கலாம், இப்போதெல்லாம் அதற்கும் ஒரு படி மேலே போய் ஃபிஷ் பிங்கர், ஃபிஷ்பிரியாணி, என்றெல்லாம் கூட செய்யலாம். இவை எல்லாவற்றை காட்டிலும் சுவையானது கிராமத்து பாணியில் செய்யப்படும் புட்டு. சுறா மீனை வைத்து செய்யப்படும் இந்த புட்டின் சுவைக்கு நிகராக எதையும் சொல்ல முடியாது. இதை சாப்பிட்டவர்களுக்கு இதன் சுவை தெரியும். சுறாவில் பலவகை உண்டு. ஆனால் புட்டு செய்வதற்கு பால் சுறா மிகவும் நன்றாக இருக்கும். ஒருமுறை நீங்கள் இப்படி செய்து பாருங்கள். பிறகு வார வாரம் ஞாயிற்றுக்கிழமை உங்கள் வீட்டில் இதைத்தான் செய்ய சொல்லி கேட்பார்கள்.
சூரா புட்டு ஆரோக்கியமும் கூட….தாய்க்கு பால் சுரக்க இந்த சூரா புட்டு செய்முறைமுறை பயன்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் நல்லது. சூரா மீனில் கொழுப்பு இல்லை. நாம் உணவில் சேர்க்கும் இந்த மீனில் வைட்டமின் டி, கால்சியம், புரதம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், அயோடின் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இந்த மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த சத்து உடலின் மெட்டபாலிசத்தை சீராக வைக்க உதவுகிறது.
சுறா புட்டு வாசமும் ருசியும் கலந்த சூப்பரான ரெசிபி தான் இது. இதை பார்ப்பதற்கு பொரியல் போல உங்களுக்கு தெரிந்தாலும், இதில் நாம் சேர்க்கக்கூடிய சில விஷயங்கள் சுறா புட்டின் வாசத்தை அதிகமாக்கி தரும். மிக மிக சுலபமான முறையில் செய்யக்கூடிய இந்த ரெசிபியை யாரும் மிஸ் பண்ணாதீங்க. ரசம் சாதம், சாம்பார் சாதம், மோர் குழம்பு சாதத்தோடு வைத்து சாப்பிடும் போது அட்டகாசமான காம்பினேஷன் இது. வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.
கிராமத்து சுறா புட்டு | Village Sura Puttu Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 250 கிராம் சுறா மீன்
- 2 டம்ளர் தண்ணீர்
- உப்பு தேவையான அளவு
- 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள்
- எண்ணெய் தேவையான அளவு
- 1/4 தேக்கரண்டி கடுகு
- கறிவேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது
- 1/4 கப் இஞ்சி, பூண்டு பொடியாக நறுக்கியது
- 4 பச்சை மிளகாய்
- 1 தேக்கரண்டி மிளகு தூள்
செய்முறை
- சுறா மீனை தோல் நீக்கி சுத்தம் செய்து 2-3 துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு மீன் முழுகும் அளவு தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- 2 விசில் வந்ததும் இறக்கிவிடலாம். பின்னர் நீரை வடி கட்டி மீன் துண்டுகளை எடுத்து தோல் மற்றும் எலும்புகளை நீக்கிவிட்டு உதிர்த்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து பின் பொடியாக நறுக்கி பூண்டுமற்றும் இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
- பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து பொடியாக ந்றிக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- அத்துடன் உதிர்த்து வைத்துள்ள சுறா மீனைச் சேர்த்து மசாலா நன்கு மீனில் சேரும் வரை நன்கு கிளற் வேண்டும். நன்கு உதியாக வந்ததும் மிளகுத்தூள் கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவி கிளறி விட்டு இறக்கினால் சுவையான கார சாரமான சுறா புட்டு தாயார்.