விநாயகர் சதுர்த்தி 2023 – வழிபடும் நாள், முறை, சிலை வாங்கும் நேரம் & பூஜை நேரம்

Vinayagar chathurthi
Vinayagar chathurthi
- Advertisement -

பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் ஏதோ ஒரு விதமான கடவுள் வழிபாடு என்பது இருக்கும். அந்த வகையில் பார்த்தால் நாம் எந்த கடவுளை வழிபடுவதற்கு முன்பாகவும், விநாயகர் பெருமாளை வழிப்படுவது என்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அதேபோல் அனைத்து தெய்வங்களுக்கும் மூத்தவராகவும் விளங்கக்கூடியவர் விநாயகர் தான். மேலும் விநாயகருக்கு கணபதி, கணேஷ் என்ற இதர பெயர்களும் இருக்கிறது.

-விளம்பரம்-

கணபதியை தொழுதால் காரியம் கைகூடும் என்பது அருளாளர்கள் வாக்கு. எந்த காரியத்தையும், நற்காரியமாக மாற்றுவிக்கும் வல்லமை மிக்க மூல முதல்வன், முழுமுதற் கடவுள் விநாயகர். தன்னை வழிபடும் பக்தர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றுவது விநாயகரின் தனிச்சிறப்பு. இவ்வளவு பண்புகளை கொண்டுள்ள கணபதிக்கு உகந்த நாளாக விநாயகர் சதுர்த்தி கொண்டப்படுகிறது. ஆகையால் இந்த விநாயகர் சதுர்த்தி அன்று நாம் சரியான முறையில் வழிபட்டு வருவதன் மூலம் வீட்டில் உள்ள கஷ்டம் நீங்கி ,மகிழ்ச்சி ஏற்படும். ஆகவே 2023-ஆம் ஆண்டிற்கான விநாயகர் சதுர்த்தி அன்று எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் என்று இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

விரதம் இருக்கும் முறை

விநாயகர் சதுர்த்தி தினத்தில் அதிகாலையில் எழுந்து உடலையும், உள்ளத்தையும் சுத்தம் செய்ய வேண்டும். இயன்றவர்கள் சூரியன் உதிக்கும் முன் பால் பழம் அருந்தி, மாலை வரை விநாயகர் நினைவில் உபவாசம் இருக்கலாம்.காலை வழிபாட்டின் போதே சங்கடங்களை தீர்க்க வேண்டும் என மனதில் சங்கல்பம் செய்து வேண்டிக் கொண்டு பூஜையை தொடங்க வேண்டும். இந்த விரதத்தின்போது செய்யும் பூஜையில் விநாயகருக்கு நைவேத்தியமாக நெய், சர்க்கரை, எள் சேர்த்த கொழுக்கட்டைகளைத் தயார் செய்து படைக்கலாம்.துன்பங்களில் இருந்து விடுபட அரச இலை, வில்வ இலை, வெள்ளெருக்கு, அருகம்புல், அகத்தி இலை , அரளி இவற்றில் ஏதாவது ஒன்றால் அர்ச்சனை செய்யலாம்.

எந்த நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட‌ வேண்டும்

சூரிய உதயத்தின் போது சதுர்த்தி திதி இருக்கும் நாளிலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன. பிள்ளையாபட்டி தலத்தில் செப்டம்பர் 19 ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம், புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு செப்டம்பர் 18 ம் தேதி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனால் செப்டம்பர் 18, 19 இரண்டு நாட்களுமே விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு ஏற்ற நாள் தான்.

விநாயகர் வாங்க உகந்த நேரம்

செப்டம்பர் 18 திங்கட்கிழமை இந்த நாளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுபவர்கள், காலை 9 மணிக்கு மேல் 10.20 மணிக்குள் விநாயகரை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட வேண்டும்.

-விளம்பரம்-

பூஜை செய்ய உகந்த நேரம்

சதுர்த்தி திதி செப்டம்பர் 18 திங்கட்கிழமை பிற்பகல் 12:39 மணிக்கு தொடங்கி, செப்டம்பர் 19 ம் தேதி பிற்பகல் 1:43 மணிக்கு நிறைவடைகிறது. விநாயக சதுர்த்தி தினத்தில் அவரவர் வசதிக்கேற்ப, சக்திக்கேற்ப புதிதாக விநாயகர் சிலைகளை வாங்கி அலங்கரித்து வீட்டில் பிரதிஷ்டை செய்யலாம். இன்று தொடங்கி நாளை நண்பகல் வரை நீடிப்பதால் 19ம் தேதி பிற்பகல் வரை விநாயகரை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.

வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ஒவ்வொருவரும் செய்வது அவசியமானது. அனைவரும் அவர்களது வீட்டில் சிறிய மண் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு மூன்று அல்லது 5 நாட்கள் கழித்து அதை நீர் நிலைகள், ஆறு, கடலில் கரைப்பது நல்லது.

-விளம்பரம்-