குக் வித் கோமாளி ஷெரின் செய்த ருசியான தர்பூசணி கோப்தா குழம்பு இப்படி வீட்டிலே செய்து பாருங்க!

- Advertisement -

கோப்தா குழம்பை பலவாறு சமைக்கலாம். ஆனால் அவற்றில் சுரைக்காய் கோப்தா குழம்பு மிகவும் பிரபலமானது. மேலும் அசைவ உணவாளர்களுக்கு இறைச்சியை வைத்தும் கோப்தா குழம்பு செய்யலாம். ஆனால் இவற்றிலேயே தர்பூசணி கோப்தா குழம்பு சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் இது தர்பூசணி ரெசிபிக்களிலேயே மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் என்பதாலேயே ஆகும்.

-விளம்பரம்-

இதனையும் படியுங்கள் : வெயிலுக்கு இதமா குளு குளுனு தர்பூசணி கிரானிட்டா இப்படி செய்து பாருங்க!

- Advertisement -

குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் தர்பூசணி கோப்தா கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க. பொதுவாக கோப்தா என்பது ஒரு வட இந்திய ரெசிபி. இது மிகவும் ஈஸியான, அதே சமயம் சுவையான ரெசிபியும் கூட. இது நிச்சயம் வீட்டில் உள்ளோருக்கு பிடித்தவாறு இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Print
No ratings yet

தர்பூசணி கோப்தா | Watermelon Kofta Recipe in Tamil

கோப்தா குழம்பை பலவாறு சமைக்கலாம். ஆனால் அவற்றில் சுரைக்காய் கோப்தா குழம்பு மிகவும் பிரபலமானது. மேலும் அசைவ உணவாளர்களுக்கு இறைச்சியை வைத்தும் கோப்தா குழம்பு செய்யலாம். ஆனால் இவற்றிலேயே தர்பூசணி கோப்தா குழம்பு சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஏனெனில் இது தர்பூசணி ரெசிபிக்களிலேயே மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும் என்பதாலேயே ஆகும். குழந்தைகளுக்கு சற்று வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
Prep Time15 minutes
Active Time15 minutes
Total Time30 minutes
Course: Breakfast, dinner, LUNCH
Cuisine: Indian, north india
Keyword: kofta
Yield: 4 People
Calories: 46kcal

Equipment

  • 1 மிக்ஸி
  • 1 பவுள்
  • 1 கடாய்
  • 1 கரண்டி

தேவையான பொருட்கள்

உருண்டை

  • 1/2 துண்டு தர்பூசணி
  • 1/4 சிட்டிகை மஞ்சள் தூள்  
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் கடலை
  • 2 டேபிள் ஸ்பூன் நறுக்கிய
  • 1 டீஸ்பூன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
  • உப்பு தேவையானஅளவு

கிரேவி

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 பட்டை
  • 1 கிராம்
  • 2 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 6 பல் பூண்டு
  • 1/2 கப் நறுக்கிய
  • 2 தக்காளி
  • 10 முந்திரி
  • 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம்
  • 1/2 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 1/2 டீஸ்பூன் மல்லி
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்  
  • 1/4 டீஸ்பூன் கஸ்தூரி மேத்தி

செய்முறை

  • முதலில் தர்பூசணியின் மேலே உள்ள சிகப்பு பகுதியையும் கீழே உள்ள பச்சை பகுதியையும் நீக்கி விட்டு நடுவில் உள்ள வெள்ளை பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் அந்த வெள்ளை பகுதியை கேரட் துருவலில் துருவிக் கொள்ளவும்.
  • துருவிய தர்பூசணியுடன் மிளகாய் தூள், பச்சை மிளகாய், கடலைமாவு, மஞ்சள் தூள், உப்பு, வெங்காயம் சேர்த்து நன்கு பிசைந்து உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருண்டைகளை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்.
  • பின் ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், ‌மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் தக்காளி மற்றும் முந்திரி சேர்த்து பச்சை வாசனை போக, நன்கு வதக்கவும்.
  • பின் மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா தூள் எல்லாம் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் வதக்கிய மசாலாவை ஆற வைத்து மிக்ஸிக்கு மாற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். தேவையானால் கீரிம் சேர்த்து கொள்ளவும்.
  • தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் தர்பூசணி உருண்டை சேர்த்து வதக்கவும். பின் அதன் மேல் சிறிதளவு கஸ்தூரி மேத்தி தூவி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • தேவையானால், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை தூவி சிறிது நெய் சேர்த்து பரிமாறவும்.
  • சுவையான தர்பூசணி கோப்தா கறி ரெடி. இதை சாதத்துடன், சப்பாத்தியுடன், புலாவ் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 700g | Calories: 46kcal | Carbohydrates: 12g | Protein: 0.61g | Fat: 0.2g | Sodium: 1mg | Potassium: 112mg | Fiber: 0.6g | Vitamin C: 8.1mg | Calcium: 7mg | Iron: 0.24mg