By: PREM KUMAR
திணை மற்றும் பாசி பருப்பை எண்ணெய் இல்லாமல் வறுக்கவும்
குக்கரில் வறுத்த திணை, பாசிபருப்பை 3 கப் தண்ணீரில் 4 விசில்கள் வரும்வரை வேகவைக்கவும்
வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வைக்கவும்.
பருப்பு கலவை நன்கு வெந்ததும் அதனோடு வெல்ல பாகு,ஏலக்காய் தூள் மற்றும் பச்சை கற்பூரத்தை சேர்த்து கலக்கவும்
ஒரு வானலியில் நெய் ஊற்றி, உலர்ந்த திராட்சை, முந்திரி ஆகியவற்றை நிறம் மாறும்வரை வறுத்து திணை சக்கரை பொங்கலுடன் சேருங்கள்.
அவ்வளவு தான் தித்திக்கும் சுவையில் திணை சக்கரை பொங்கல் தயார் சுட சுட பரிமாறுங்கள்