வீட்டில் பூரி,சப்பாத்தியோ அதற்கு ஏற்ற வெள்ளை குருமா இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

- Advertisement -

இட்லி, சப்பாத்தி, பூரி, தோசை, புலாவ் போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள ரொம்பவே சூப்பராக இருக்கக்கூடிய இந்த வெள்ளை குருமா எப்படி வீட்டில் எளிதாக தயாரிக்கலாம். குருமா என்றாலே மிளகாய் தூள் மசாலா சேர்த்து செய்வது தானே வழக்கம். ஆனால் இந்த குருமாவுக்கு எந்த மசாலாவும் சேர்க்கப் போவதில்லை.

-விளம்பரம்-

இட்லி, தோசை என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தான் செய்ய வேண்டும். அதேபோல் சப்பாத்தி, பூரி என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு, சென்னா மசாலா இதை தான் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறான அனைத்து விதமான உணவுகளுடன் சாப்பிட மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது குருமா மட்டும் தான். இந்த குருமாவை இரண்டு விதமாக மிளகாய்த்தூள் சேர்த்து மசாலா குருமாவாகவும், மிளகாய் தூள் சேர்க்காமல் வெள்ளை குருமாவாகவும் செய்யலாம். அதிலும் இவற்றை ஹோட்டலில் சென்று சாப்பிட்டோம் என்றால் அங்கு கொடுக்கப்படும் வெள்ளை குருமா மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.

- Advertisement -

வெள்ளை பூரி குருமா சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அவ்வாறு நமது வீட்டிலும் இந்த வெள்ளை குருமாவை ஹோட்டலில் செய்யப்படும் அதே சுவையில் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Print
5 from 1 vote

வெள்ளை குருமா | White Kuruma Recipe In Tamil

இட்லி, தோசை என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தான் செய்ய வேண்டும். அதேபோல் சப்பாத்தி,பூரி என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு, சென்னா மசாலா இதை தான் செய்ய வேண்டும்.ஆனால் இவ்வாறான அனைத்து விதமான உணவுகளுடன் சாப்பிட மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும்ஒரு உணவுப் பொருள் என்றால் அது குருமா மட்டும் தான். இந்த குருமாவை இரண்டு விதமாக மிளகாய்த்தூள்சேர்த்து மசாலா குருமாவாகவும், மிளகாய் தூள் சேர்க்காமல் வெள்ளை குருமாவாகவும் செய்யலாம்.அதிலும் இவற்றை ஹோட்டலில் சென்று சாப்பிட்டோம் என்றால் அங்கு கொடுக்கப்படும் வெள்ளை குருமா மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: Side Dish
Cuisine: tamilnadu
Keyword: White Kuruma
Yield: 4
Calories: 132kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 பெரிய வெங்காயம்
  • 2 உருளைக்கிழங்கு வேகவைத்தது
  • 1 கரண்டி இஞ்சி பூண்டு விழுது

அரைக்க

  • மூன்று தேக்கரண்டி தேங்காய்
  • 3 பச்சை மிளகாய்

தாளிக்க

  • சோம்பு சிறிது
  • கறிவேப்பிலை சிறிது
  • 2 பட்டை
  • 2 லவங்கம்
  • எண்ணெய் தேவையான அளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அதனுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  • பின் அதனுடன் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதன் பின் தேவையான அளவிற்கு தண்ணீர், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும்.
  • கொதிக்கும் போது அவித்து மசித்து வைத்து இருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து கலந்து விடவும். குருமா கொஞ்சம் கெட்டியாக வந்ததும் வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
  • பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையான வெள்ளை குருமா ரெடி.

செய்முறை குறிப்புகள்

இட்லி, சப்பாத்தி, பூரி, தோசை, புலாவ் போன்றவற்றுடன் தொட்டுக் கொள்ள ரொம்பவே சூப்பராக இருக்கக்கூடிய இந்த வெள்ளை குருமா எப்படி வீட்டில் எளிதாக தயாரிக்கலாம். குருமா என்றாலே மிளகாய் தூள் மசாலா சேர்த்து செய்வது தானே வழக்கம். ஆனால் இந்த குருமாவுக்கு எந்த மசாலாவும் சேர்க்கப் போவதில்லை.
இட்லி, தோசை என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள சட்னி, சாம்பார் தான் செய்ய வேண்டும். அதேபோல் சப்பாத்தி, பூரி என்றால் அதனுடன் தொட்டுக்கொள்ள தக்காளி தொக்கு, சென்னா மசாலா இதை தான் செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறான அனைத்து விதமான உணவுகளுடன் சாப்பிட மிகவும் சூப்பரான சுவையில் இருக்கும் ஒரு உணவுப் பொருள் என்றால் அது குருமா மட்டும் தான். இந்த குருமாவை இரண்டு விதமாக மிளகாய்த்தூள் சேர்த்து மசாலா குருமாவாகவும், மிளகாய் தூள் சேர்க்காமல் வெள்ளை குருமாவாகவும் செய்யலாம். அதிலும் இவற்றை ஹோட்டலில் சென்று சாப்பிட்டோம் என்றால் அங்கு கொடுக்கப்படும் வெள்ளை குருமா மிகவும் அற்புதமான சுவையில் இருக்கும்.
வெள்ளை பூரி குருமா சுவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே மிகவும் பிடிக்கும். அவ்வாறு நமது வீட்டிலும் இந்த வெள்ளை குருமாவை ஹோட்டலில் செய்யப்படும் அதே சுவையில் எப்படி செய்யலாம் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

Nutrition

Serving: 100g | Calories: 132kcal | Carbohydrates: 16g | Protein: 8g | Sodium: 48mg | Potassium: 142mg | Sugar: 1g