எவ்வளவு செய்தாலும் காலியாகும் இரவு உணவுக்கு ஒயிட் சாஸ் பாஸ்தாவை இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

- Advertisement -

தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு நூடுல்ஸ், பாஸ்தா பக்கம் ஆசை திரும்பும். இந்த சமயங்களில் நீங்கள் பாஸ்தா வாங்கி இப்படி ஒயிட் சாஸ் பாஸ்தா செய்து பாருங்க, ரொம்பவே ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவீங்க. பாஸ்தா இதுவும் ஒரு டிபன் மற்றும் மாலை நேர உணவு வகையாகும். மிக விரைவாக இது செய்யப்படுவதால் சீக்கிரமாக செய்யப்படும் ஒரு உணவு வகையாகும் இந்த ஒயிட் சாஸ் பாஸ்தா.

-விளம்பரம்-

ஒயிட் சாஸ் பாஸ்தா காலை நேர உணவாகவும், மாலை சிற்றுண்டி, அல்லது இரவு நேர உணவாக எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில்  வைத்து அனுப்பலாம்.   எப்போதும்  இட்லி அல்லது தோசை  சாப்பிட்டு போர் அடிக்கும் பொழுது சில சமயங்களில் இது போன்ற பாஸ்தா வகைகளை செய்து சாப்பிடலாம்.  பொதுவாக  ஒயிட் சாஸ் பாஸ்தா சாஸ் சேர்த்து செய்யப்படுகிறது மேலை நாடுகளில் செய்யப்படும் முறை. இதனை நமது வீட்டிலேயே செய்து கொடுத்தால் அனைவரும் மிகவும் விரும்புவார்.சுவையான மசாலா பாஸ்தாவை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள். வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

- Advertisement -
Print
No ratings yet

ஒயிட் சாஸ் பாஸ்தா | White Sause Pasta Recipe In Tamil

ஒயிட் சாஸ் பாஸ்தா காலை நேர உணவாகவும், மாலை சிற்றுண்டி, அல்லது இரவு நேர உணவாக எடுத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸில்  வைத்து அனுப்பலாம்.   எப்போதும்  இட்லிஅல்லது தோசை  சாப்பிட்டு போர் அடிக்கும் பொழுது சில சமயங்களில் இது போன்ற பாஸ்தாவகைகளை செய்து சாப்பிடலாம்.  பொதுவாக  ஒயிட் சாஸ் பாஸ்தா சாஸ் சேர்த்து செய்யப்படுகிறதுமேலை நாடுகளில் செய்யப்படும் முறை. இதனை நமது வீட்டிலேயே செய்து கொடுத்தால் அனைவரும்மிகவும் விரும்புவார்.சுவையான மசாலா பாஸ்தாவை நீங்களும் செய்து சுவைத்து மகிழுங்கள்.வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
 
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: Breakfast, dinner, snacks
Cuisine: Italian
Keyword: White Sause Pasta
Yield: 4
Calories: 221kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1 கப் பாஸ்தா
  • 2 கப் தண்ணீர்
  • 1 டீஸ்பூன் உப்பு

வதக்க

  • 4 டீஸ்பூன் எண்ணெய்
  • 1 பற்கள் பூண்டு
  • 3 ஸ்பூன் குடைமிளகாய்
  • 3 ஸ்பூன் கேரட்
  • 3 ஸ்பூன் சோளம்
  • 1 டேபிள்ஸ்பூன் வெண்ணெய்
  • 1 டேபிள்ஸ்பூன் மைதா மாவு
  • 1 1 /2 கப் பால்
  • 1 மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • முதலில் பாஸ்தாவை தண்ணீரில் போட்டு 7 நிமிடங்களுக்கு வேக வைத்துக்கொள்ளுங்கள். பின் கடாய் வைத்து வதக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை பொடியாக நறுக்கி 5 நிமிடங்கள் வதிக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
     
  • மீண்டும் கடாய் வைத்து வெண்ணெய் விட்டு உருகியதும் மைதா மாவு சேர்த்து நன்கு வதக்கிக்கொண்டே இருங்கள். மாவு வெண்ணையுடன் நன்கு கலக்க வேண்டும்.
  • பின் பால் ஊற்றி வதக்கவும். நன்கு கெட்டியான சாஸ் பதம் வரும் வரை வதிக்கிக்கொண்டே இருக்கவும்.
  • பின் அதில் காய்ந்த மிளகாய், மிளகு, உப்பு சிறிதளவு சேர்த்து கலக்குங்கள். பின் வதக்கி வைத்துள்ள காய்களை சேர்த்து வதக்குங்கள்.
  • அடுத்ததாக வேக வைத்த பாஸ்தாவை சேர்த்து பிரட்டுங்கள். சாஸ் இறுகி, மசாலா சேர்ந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவுதான் ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.

Nutrition

Serving: 500g | Calories: 221kcal | Carbohydrates: 43.2g | Protein: 8.1g | Fat: 1.3g | Cholesterol: 184mg | Sodium: 650mg | Potassium: 403mg | Fiber: 2.5g | Calcium: 11mg