Advertisement
அசைவம்

காரசாரமான யாழ்பாணம் சிக்கன் ரெசிபி செய்வது எப்படி ?

Advertisement

பொதுவாக சிக்கனை பயன்படுத்தி செய்யும் ரெசிபிகள் எதுவாக இருந்தாலும் யாரும் பிடிக்காத என்று சொல்ல மாட்டார்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள் அந்த அளவிற்கு சிக்கன் ரெசிபிகள் அற்புதமான சுவையில் இருக்கும். ஆனால் நாம் இன்று சுவைக்கே சுவையூட்டும் அளவிற்கு யாழ்ப்பாணம் சிக்கன் ரெசிபி பற்றி தான் இன்று நாம பார்க்க இருக்கிறோம். உங்கள் வீட்டில் ஒரு முறை இது போன்று யாழ்ப்பாணம் சிக்கன் ரெசிபி செய்து

இதையும் படியுங்கள் : காரசாரமான சுவையில் பெப்பர் சில்லி சிக்கன் செய்வது எப்படி ?

Advertisement

உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல் அடிக்கடி இந்த சிக்கன் ரெசிபி உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ஒரு தாறுமாறான சிக்கன் ரெசிபி. அதனால் இன்று இந்த யாழ்ப்பாணம் சிக்கன் ரெசிபி எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

யாழ்பாணம் சிக்கன் ரெசிபி | Yalpanam Chicken Recipe in Tamil

Print Recipe
நாம் இன்று சுவைக்கே சுவையூட்டும் அளவிற்கு யாழ்ப்பாணம் சிக்கன் ரெசிபி பற்றி தான் இன்று நாம பார்க்க இருக்கிறோம். உங்கள் வீட்டில் ஒரு முறை இது போன்று யாழ்ப்பாணம் சிக்கன் ரெசிபி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு அற்புதமான சுவையில் இருக்கும் இன்னும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அது மட்டுமில்லாமல் அடிக்கடி இந்த சிக்கன் ரெசிபி உங்களை செய்து தர சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு ஒரு தாறுமாறான சிக்கன் ரெசிபி.
Course Fry
Cuisine Indian, TAMIL
Keyword Yalpanam Chicken, யாழ்பாணம் சிக்கன்
Prep Time 20 minutes
Cook Time 20 minutes
Total Time 40 minutes
Servings 4 people
Calories 302

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி
  • 1 பெரிய பவுள்

Ingredients

மிக்ஸியில் அரைக்க

  • 20 சின்ன வெங்காயம் தோல் உரித்தது
  • 3 பச்சை மிளகாய்
  • 3 பல் பூண்டு

சிக்கன் ஊற வைத்து பொரிக்க

  • ½ KG சிக்கன்
  • 1 tbsp உப்பு
  • 1 tbsp மிளகு தூள்
  • ½ பழம் எலுமிச்சை சாறு
  • 4 மேசை கரண்டி எண்ணெய்

யாழ்பாணம் சிக்கன் ரெசிபி

  • 1 tbsp சோம்பு
  • 1 tbsp இஞ்சி பொடியாக நறுக்கியது
  • அரைத்த வெங்காயம்
  • 1 tbsp மிளகு தூள்
  • 1 tbsp தனியா துள்
  • ¼ tbsp மஞ்சள் தூள்
  • ½ tbsp சோம்பு பொடி
  • ½ tbsp கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 2 tbsp தயிர்
  • 3 tbsp தேங்காய் பால்

Instructions

  • முதலில் நாம் நன்கு சுத்தப்படுத்தி வைத்துக் கொண்ட சிக்கனை ஒரு பவுளில் சேர்த்து அதனுடன் உப்பு, மிளகு மற்றும் எலுமிச்சை பழ சாறு சேர்த்து சிக்கனை நன்கு பெரட்டி ஒரு 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்
    Advertisement
    ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் நாம் ஊற வைத்த சிக்கனை சேர்த்து அனைத்து பக்கங்களும் வேகமாறு அடிக்கடி பிரட்டி விட்டு பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு தோல் உரித்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு இந்த பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு முறை மட்டும் மிக்ஸியை சுத்தவிட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின்பு மறுபடியும் அதே கடாயை அடுப்பில் வைத்து மீதமிருக்கும் எண்ணெயில் சோம்பு மற்றும் பொடியாக நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின் இஞ்சி நன்றாக வதங்கியதும் இதனுடன் நம் மிக்ஸியில் அரைத்தால் வெங்காயத்தையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
  • பின் வெங்காயம் நன்கு வதங்கி வந்ததும் இதனுடன் மிளகு தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், சோம்பு பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து நன்றாக கிளறி விட்டு வேக வைத்துக் கொள்ளுங்கள்
  • பின் மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் இதனுடன் இரண்டு டீஸ்பூன் தயிர் மற்றும் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள். பின் இதனுடன் பொரித்த சிக்கனை சேர்த்து கடாயை மூடி வைத்து ஒரு மூன்று நிமிடங்கள் வேக வைத்துக் கொள்ளுங்கள்.
  • அதன் பின் இதனுடன் மூன்று டீஸ்பூன் அளவு கெட்டியான தேங்காய்ப்பால் ஊற்றி கிளறிவிட்டு ஒரு நிமிடம் அடுப்பில் வேக வைத்து இறக்கி விடுங்கள். அவ்வளவு தான் சுவையான யாழ்ப்பாணம் சிக்கன் ரெசிபி இனிதே தயாராகிவிட்டது.

Nutrition

Serving: 500kg | Calories: 302kcal | Carbohydrates: 1g | Protein: 21g | Saturated Fat: 4g | Cholesterol: 9mg | Sodium: 37mg | Potassium: 953mg | Fiber: 13g
Advertisement
Prem Kumar

Recent Posts

முட்டை இருந்தால் மட்டும் போதும் ருசியான முட்டை பணியாரம் செய்து விடலாம்! மாலை நேரத்திற்கு ஏற்ற பக்காவான ஸ்நாக்ஸ்!

அனைவரும் தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது. பெரியவர்கள் தினமும் இரண்டு முட்டை கூட அசால்டாக சாப்பிடுவார்கள்…

20 நிமிடங்கள் ago

சுவையான கேக் வீட்டிலயே சாப்பிட நினைத்தால் ஒரு முறை வாழைப்பழ கப் கேக் செஞ்சு பாருங்க, வாயில் வைத்தவுடன் கரையும்!

சுவையான உணவுகளைச் சமைத்துச் சாப்பிடுவது என்பது ஒரு வகை அலாதியான இன்பம் தான். அதிலும் நமக்குப் பிடித்த உணவுகளைச் சமைப்பது…

3 மணி நேரங்கள் ago

சிம்பிளான அவரைக்காய் பொரியல் எப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிடுங்க!

டெய்லி ஏதாவது ஒரு காய்கறி சாப்பிடுவது ரொம்ப நல்லது. அந்த வகையில பச்சை காய்கறிகளான அவரைக்காய் பீன்ஸ் பட்டாணி வெண்டைக்காய்…

3 மணி நேரங்கள் ago

2024 சித்திரை அமாவாசை வழிபாடு இரண்டு மடங்கு பலன்களை நமக்கு கொடுக்கும்!

தமிழ் மாதத்தில் முதல் மாதமாக வரக்கூடிய சித்திரை மாதம் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. சூரிய பகவான்…

5 மணி நேரங்கள் ago

வீட்டில் முட்டைக்கோஸ் மற்றும் பட்டாணி உள்ளதா? அப்படியானால் அதை கொண்டு 15 நிமிடங்களில் சுவையான இந்த பட்டாணி முட்டைகோஸ் சாதம் செய்து பாருங்கள்!!

பொதுவாக முட்டைக்கோஸ் சாதம் என்றால் பலருக்கும் ஹோட்டலில் சாப்பிட தான் பிடிக்கும். ஏனென்றால் அதன் சுவையே தனி. வீட்டில் செய்தால்…

6 மணி நேரங்கள் ago

2024 அட்சய திருதியை அன்று தங்கம் மற்றும் பணம் அதிகமாக சேர்வதற்கு அதிர்ஷ்டம் உள்ள சில ராசிகள்

இந்த ஆண்டு அட்சய திருதியை மே பத்தாம் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய…

7 மணி நேரங்கள் ago