- Advertisement -
சில்லி சிக்கன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்று. Indo-Chinese உணவு வகை. இவை பெரும்பாலும் பிரைடு ரைஸ், பிரியாணியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் செய்கிறது இன்னும் சொல்லப்போனால் பல துரித உணவுகளில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு உணவு என்றாலே அது சில்லி சிக்கன் தான் என்று சொன்னால் அது மிகை அல்ல.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : புதிய வகையில் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?
- Advertisement -
அந்த வகையில் பெப்பர் சில்லி சிக்கன் சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருக்கும். அப்போ இந்த பெப்பர் சில்லி சிக்கன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா வாங்க, அது எப்படி செய்வது, தேவையான பொருட்கள் என செய்முறை விளக்கங்கள் கொடுத்துளோம் அதை படித்து பார்த்து நீங்களும் இது போல் செய்து பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்.
பெப்பர் சில்லி சிக்கன் | Pepper Chili Chicken Recipe In Tamil
சில்லி சிக்கன் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒன்று. Indo-Chinese உணவு வகை. இவை பெரும்பாலும் பிரைட்ரைஸ், பிரியாணியுடன் சேர்த்து உண்ணப்படுகிறது. இதை வெறுமனே ரசித்து உண்பதற்கும் ஒரு கூட்டமே இருக்கத்தான் சேர்கிறது. இன்னும் சொல்லப்போனால் பல துரித உணவுகளில் அதிக அளவில் விற்பனையாகும் ஒரு உணவு என்றாலே அது சில்லி சிக்கன் தான் என்று சொன்னால் அது மிகை அல்ல. இந்த வகையில் பெப்பர் சில்லி சிக்கன் சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருக்கும். அப்போ இந்த பெப்பர் சில்லி சிக்கன் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாமா வாங்க.
Yield: 4 people
Calories: 230kcal
Equipment
- 2 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- ¼ கிலோ போன்லெஸ் சிக்கன்
- 1 முட்டை
- 1 டேபிள் ஸ்பூன் கான்ப்ளவர்
- ¼ கப் தயிர்
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- ½ டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்
- 3 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள்
- 3 பச்சை மிளகாய் நறுக்கியது
- ½ டேபிள் ஸ்பூன் கரம் மசாலா தூள்
- ரெட் கலர் சிறிது
- உப்பு தேவைக்கேற்ப
வதக்குவதற்கு:
- 1 டேபிள் ஸ்பூன் மிளகு தூள் தட்டியது
- 1 வெங்காயம் நீளமாக அறிந்தது
- பச்சை மிளகாய் நறுக்கியது
- கொத்தமல்லி சிறிது
- எண்ணெய் பொறிக
செய்முறை
- ஒரு பவ்ளில் போன்லெஸ் சிக்கன், போட்டு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகுத்தூள், பச்சை மிளகாய், கரம் மசாலா தூள், ரெட் கலர், உப்பு இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வாய்த்த சிக்கனை நன்றாக பொரித்து தனியாக எடுத்துவைக்கவும்.
- பொறித்த எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தையும் பொரித்து தனியாக எடுத்து வைக்கவும்.
- பிறகு ஒரு கடையை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொறித்த சிக்கனை சேர்த்து அதனுடன் மிளகு, பச்சை மிளகாய், கொத்தமல்லி போட்டு வதக்கவும்.
- வதங்கியதும் அதன் மேல் பொறித்த வெங்காயத்தை போட்டு கிளறி இறக்கவும்.
Nutrition
Serving: 300g | Calories: 230kcal | Carbohydrates: 8g | Protein: 46g | Fat: 12g | Saturated Fat: 4.3g | Cholesterol: 67mg | Sodium: 37mg | Potassium: 1050mg