காரசாரமான கருணைக்கிழங்கு பொடிமாஸ் இப்படி செய்து பாருங்கள் இதன் சுவை அசைவத்தையே மிஞ்சி விடும் அளவிற்கு இருக்கும்!!!

இந்த காய்கறி வகைகளிலே கிழங்கு வகைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக திகழ்கிறது. நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் கிழங்கும் வகைகளும் இடம் பெற்றுள்ள ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறா

By Prem Kumar · 4/6/2024

இந்த காய்கறி வகைகளிலே கிழங்கு வகைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக திகழ்கிறது. நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் கிழங்கும் வகைகளும் இடம் பெற்றுள்ள ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ கிழங்கு வகைகளை கட்டாயம் விரும்பி உண்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் கருணைக்கிழங்கு பொடிமாஸ் எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த கிழங்கு வகை ஒரு விதமான நாக்கு அரிப்பு தன்மையை ஏற்படுத்தும் என்பதால் யாரும் இதனை நெருங்குவது இல்லை ஆனால் இதன் சுவையை மிஞ்சிய ஒரு கிழங்கு இருக்கவே முடியாது.

கருணைக்கிழங்கை இந்த மாதிரி பொடிமாஸ் செஞ்சு பாருங்க அரிக்கவும் செய்யாது, சுவையும் அட்டகாசமாக இருக்கும். கருணைக்கிழங்கில் இப்படி பொடிமாஸ் செய்து கொடுத்தால் இன்னும் கொஞ்சம் சாப்பாடு போடுங்க என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு ருசியாக இருக்கப் போகிறது. கருணைக்கிழங்கு மருத்துவ குணம் நிறைந்தது. இது மூல நோய்க்கு மருந்தாக உள்ளது. இதனை குழம்பு செய்து சாப்பிடுவதன் மூலம் மூலநோய் விரைவில் குணமாகும்.

இப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். உங்களுக்கு கருணைக்கிழங்கை கொண்டு வறுவல், பொரியல், மசாலா என்று செய்து போர் அடித்திருந்தால், அதனைக் கொண்டு பொடிமாஸ் செய்து சுவைத்துப் பாருங்கள். இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம், புதினா புலாவ், கொத்தமல்லி புலாவ், போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இதை செய்வதும் மிகவும் சுலபம்.

இதனையும் படியுங்கள் : ஆந்திரா ஸ்டைல் கருணைக்கிழங்கு குழம்பு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான்!

Recipes AMP · Quick view
View full