Home சைவம் சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி ?

சுவையான வெண்பொங்கல் செய்வது எப்படி ?

எடையை உயர்த்துவதில் மருந்துக்கு இணையான முக்கியத்துவம் உடையது. நோயாளிக்கு மட்டுமல்ல, எல்லா நோஞ்சான்களுக்கும் பொங்கல்தான், உடல் எடையை உயர்த்தும் விருந்தும் மருந்தும். ஆனால், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியலில், குழைவாக வெந்த பச்சரிசி வெண் பொங்கல், சர்க்கரையைத் தடாலடியாக உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே, சர்க்கரை நோயாளிகள் பச்சரிசிக்குப் பதிலாகப் பட்டை தீட்டாத தினையரிசியையோ, வரகரிசியையோ பயன்படுத்துவது சிறப்பானது. பாசிப் பருப்புக்கு பதிலாக, உடைத்த, தோல் நீக்காத பாசிப் பயரையும் பயன் படுத்தி செய்யலாம். இந்த இன்பங்களை எப்படி செய்வது தேவைப்படும் பொருள்கள் மற்றும் செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.

-விளம்பரம்-
Print
No ratings yet

சுவையான வெண்பொங்கல் எப்படி செய்வது ?

எடையை உயர்த்துவதில் மருந்துக்கு இணையான முக்கியத்துவம் உடையது. நோயாளிக்கு மட்டுமல்ல, எல்லா நோஞ்சான்களுக்கும் பொங்கல்தான், உடல் எடையை உயர்த்தும் விருந்தும் மருந்தும். ஆனால், உடல் உழைப்பு இல்லாத வாழ்வியலில், குழைவாக வெந்த பச்சரிசி வெண் பொங்கல், சர்க்கரையைத் தடாலடியாக உயர்த்தும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே, சர்க்கரை நோயாளிகள் பச்சரிசிக்குப் பதிலாகப் பட்டை தீட்டாத தினையரிசியையோ, வரகரிசியையோ பயன்படுத்துவது சிறப்பானது. பாசிப் பருப்புக்கு பதிலாக, உடைத்த, தோல் நீக்காத பாசிப் பயரையும் பயன் படுத்தி செய்யலாம். இந்த இன்பங்களை எப்படி செய்வது தேவைப்படும் பொருள்கள் மற்றும் செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் தொகுப்பில் நாம் காணலாம்.
Active Time30 minutes
Course: Breakfast, dinner, Main Course
Cuisine: இந்தியன், தமிழ்
Keyword: VENPONGAL, வெண்பொங்கல்
Yield: 4 4
Calories: 345kcal

Equipment

  • 1 குக்கர்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

வேகவைப்பதற்கு தேவையானவை.

  • 1 கப்  பச்சரிசி 
  • ½ கப் பாசிப்பருப்பு 
  • உப்பு  தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையானவை.

  • 10 முந்திரி                        
  • 10 டேபிள் ஸ்பூன் நெய்                            
  • 1 டேபிள் ஸ்பூன் சீரகம்                          
  • 1 டேபிள் ஸ்பூன் மிளகு                           
  • 2 பச்சைமிளகாய்   தேவைப்பட்டால்
  • கருவேய்ப்பிலை சிறிதளவு
  • 1 இஞ்சி                           துண்டுகளாக நறுக்கியது.
  • 1 சிட்டிகை  பெருங்காய போடி

செய்முறை

வேகவைப்பது.

  • ஒரு  பாத்திரத்தில் 1 கப் பச்சரிசியை கழுவி சுமார் 30 நிமிடம் உறவைக்கவேண்டும். 
  • பின்பு ஒரு கடாயில் பாசிப்பருப்பை மிதமான சூட்டில் பொன்னிறமாக  வருது  தனியாக எடுத்து நன்றாக கழுவி  15 நிமிடம் ஊறவிடவும்.
  • பின்பு குக்கரில் மிதமான சூட்டில் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 4 அல்லது 5 கப்  தண்ணீர் சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சுமார் 5 முதல் 6 விசில்  வரும் வரை விடவும்
  • விசில் வந்தவுடன் அதனை நன்றாக மென்மையாகும் வரை கிளறவும். 
  • தேவைப்பட்டால் அரிசி மற்றும் பருப்பு கடினமாக இருந்தால் சிறிதளவு சூடான தண்ணீர் சேர்த்து 3 அல்லது 4 நிமிடம் வரை வேகவிடவும்.}
  • பிறகு அதை தனியாக எடுத்து வைக்கவும்.

தாளிப்பது.

  • {குறிப்பு: தாராளமாக நெய் பயன்படுத்தினால் வெண்பொங்கல் மிக சுவையாக இருக்கும்.} 
  • ஒரு கடாயில்  2 முதல் 4 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து மிதமான சூட்டில் 10 முந்திரியை  இரண்டாக உடைத்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.அதை தனியாக ஒரு தட்டில் எடுத்து  வைக்கவும். 
  • பின்பு அதே கடாயில் குறைவான தீயில்  1 டேபிள் ஸ்பூன் சீரகம் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மிளகு சேர்த்து அதனுடன் நறுக்கிய அல்லது துருவிய இஞ்சி சேர்க்கவும். {தேவைப்பட்டால் 2 கீறிய  பச்சைமிளகாய்  சேர்க்கலாம்.} இவைகளை பொன்னிறமாக வறுத்த பின்பு அதனுடன் கருவேய்ப்பிலை சிறிதளவு , 1 சிட்டிகை பெருங்காயப்பொடி சேர்க்கவும்.
  • பிறகு வருத்தத்தை நாம் வேகவைத்த அரிசி மற்றும் பருப்புடன் இதனை சேர்த்து நன்றாக கிளறவும்.
  • இப்பொழுது சுவையான வெண்பொங்கல் தயார்..

Nutrition

Serving: 4PERSON | Calories: 345kcal | Carbohydrates: 78.2g | Protein: 6.8g | Fat: 2.5g | Iron: 0.7mg

NO COMMENTS

LEAVE A REPLY

Recipe Rating

Please enter your comment!
Please enter your name here