வறுத்து அரைத்த மீன் குழம்பு இப்படி செய்து பாருங்க! வீடே கமகமக்கும்!

- Advertisement -

வறுத்து அரைச்ச மீன் குழம்பு ஒருமுறை மீன் குழம்பை இப்படி வச்சு பாருங்க அட்டகாசமாக இருக்கும்!!உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம்.

-விளம்பரம்-

ஆனால் மீன் குழம்பு மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி சுவையில் இருக்கும். ஒருவர் சமைக்கும் விதத்தை பொறுத்து அதன் சுவையும் மாறுபடும். அப்படி ஒருவித தனி சுவையில் இருக்கும் வறுத்து அரைச்ச மீன் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.

- Advertisement -
Print
3.75 from 4 votes

வறுத்து அரைத்த மீன் குழம்பு | Fish Kulambu Recipe in Tamil

வறுத்து அரைச்ச மீன் குழம்பு. ஒருமுறை மீன் குழம்பை இப்படி வச்சு பாருங்க அட்டகாசமாக இருக்கும்!!உணவு பிரியர்கள் மத்தியில் மிகவும் விருப்பமான உணவாக மீன் இருக்கிறது. மீன் வைத்து குழம்பு, வறுவல், தொக்கு என பல வகைகளில் சமைத்திருக்கிறோம். ஆனால் மீன் குழம்பு மட்டும் ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி சுவையில் இருக்கும். ஒருவர் சமைக்கும் விதத்தை பொறுத்து அதன் சுவையும் மாறுபடும். அப்படி ஒருவித தனி சுவையில் இருக்கும் வறுத்து அரைச்ச மீன் குழம்பு எப்படி செய்வது என்பதைப் பற்றியே இங்கு தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்.
Prep Time15 minutes
Active Time25 minutes
Total Time40 minutes
Course: LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Fish, மீன்
Yield: 4 People
Calories: 217kcal

Equipment

  • 2 வாணலி
  • 1 மிக்ஸி ஜார்

தேவையான பொருட்கள்

  • 300 கிராம் மீன் உங்களுக்கு விருப்பமான மீன்
  • உப்பு தேவையான அளவு
  • 2 tsp தேங்காய் எண்ணெய்
  • 3 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது

வறுத்து அரைப்பதற்கு :

  • 1 கப் தேங்காய் துருவியது
  • 1 tsp மல்லி
  • 4 வர மிளகாய்
  • 2 tsp புளிச்சாறு
  • கருவேப்பிலை தேவையான அளவு
  • 5 சின்ன வெங்காயம்
  • 5 பல் பூண்டு

செய்முறை

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் புளியைத் தவிர, அனைத்து பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்க வேண்டும். பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் புளிச்சாற்றினை சேர்த்து மென்மையான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்பு ஒரு வாணலியில் அந்த அரைத்த மசாலாவை போட்டு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதித்ததுட், மூடி வைத்து எண்ணெய் தனியாக பிரியும் வரை மீண்டும் கொதிக்க விட வேண்டும். பிறகு அதில் மீன் துண்டுகளை சேர்த்து மூடி வைத்து, மீன் நன்கு வேகும் வரை கொதிக்க விடவும்.
  • அடுத்து மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, குழம்புடன் சேர்த்து இறக்கினால், வறுத்தரைச்ச மீன் குழம்பு ரெடி!!!

Nutrition

Serving: 380g | Calories: 217kcal | Carbohydrates: 12g | Protein: 29g | Fat: 2.8g | Cholesterol: 83mg | Sodium: 3619mg

இதையும் படியுங்கள் : மணமணக்கும் ருசியான செட்டிநாடு தண்ணீர் நண்டு குழம்பு இப்படி செஞ்சி பாருங்க!

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here